சென்னை, ஜூன்.16 – அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்த துறைகள் எடுக்கப்பட்டு, தங்கம் தென்ன ரசுக்கு மின்சாரத் துறையும், முத்துசாமிக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையும் வழங் கப்பட வேண்டும் என்று நேற்று (15.6.2023) ஆளுநருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத் தார்
இதனை ஆளுநர் திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
முதலமைச்சர் பரிந்துரை
அமைச்சர் வி. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நிலையில் அவர் நிர்வகித்து வந்த துறைகளான மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத் தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக் கசண்டு (மொலாசஸ்) ஆகிய வற்றை கவனிப்பதற்காக அவற்றை வேறு அமைச்சர் களுக்கு பகிர்ந்தளிப்பது பற்றி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்தார்.
அதற்கான பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பினார்.
அதில், மின்சாரத்துறையை அமைச்சர் தங்கம் தென்னர சுக்கும், மதுவிலக்கு ஆயத் தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் அளிப்பதாக அந்த பரிந்துரையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பி அனுப்பிய ஆளுநர்
இந்த பரிந்துரையை ஆளுநர் ஏற்று அதற்கான உத்தரவை பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த பரிந்துரை யில் சில விளக்கங்களை கேட்டு அதை அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பியதாக கூறப் படுகிறது.
இதுகுறித்து நேற்று இரவு (15.6.2023) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண் டனர்.
ஆளுநர் கேட்ட விளக்கங்களுடன் பரிந்துரைக் கடிதம் மீண்டும் அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படு கிறது.
அதன் பின்னரே அமைச்சர்களுக்கான துறை மாற்றம் குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பை ஆளுநர் அலுவலகம் வெளியிடும்.
துறை இல்லாத அமைச்சர்
முதல்-அமைச்சரின் பரிந்துரையின்படி, அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு ஏற்கெ னவே நிதித்துறை, திட்டம், மனிதவள மேலாண்மை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக் கால நன்மைகள் மற்றும் புள்ளியியல், தொல்லியல் துறை ஆகிய துறைகள் இருக்கும் நிலையில், அவருக்கு மின்சாரம்,மரபு சாரா எரி சக்தி மேம்பாடு ஆகிய துறை களும் கூடுதலாக ஒதுக்கப் படுகின்றன.
அமைச்சர் முத்துசாமி ஏற்கெனவே வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, நகரமைப்பு திட்டமிடல் மற்றும் வீட்டுவசதி மேம்பாடு, இடவசதிகட்டுப்பாடு. நகர திட்டமிடல் மற்றும் நகர்பகுதி வளர்ச்சி ஆகிய துறைகளை நிர்வகித்து வரும் நிலையில், அவருக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக் கசண்டு (மொலாசஸ்)ஆகிய துறைகள் கூடுதலாக ஒதுக்கப்படுகின்றன.
அமைச்சர் செந்தில் பாலா ஜியிடம் இருந்து இந்தத் துறைகள் எடுக்கப்பட்டாலும் அவர் துறைகள் இல்லாத அமைச்சராக நீடிப்பார்.