தி.மு.க. தலைவர், முத்தமிழ றிஞர் கலைஞர் அவர்களின் மூத்த மகன் மு.க. முத்து அவர்கள் (வயது 77) இன்று (19.7.2025) காலை மறைவுற்றார் என்ற செய்தி பெரிதும் வருத்தத்திற்குரியதாகும்.
‘தமிழரெல்லாம் மானத்துடன்
வாழ்வதற்கு யார் காரணம்?
பெரியார் காரணம்’’ என்று அவர் பாடிய பாடல் புகழ் பெற்ற ஒன்றாகும். கழகக் கூட்டங்களில் எல்லாம் ஒலி பரப்பப்படுவது வாடிக்கையாகும்.
புகழ் பெற்ற பாடகர் சிதம்பரம் செயராமனின் இசை வாரிசு என்று சொல்லத்தக்க வகையில் பேசப்பட்டவர்.
நமது மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சகோதரரும் ஆவார்.
திரைப்படத்துறையிலும் மு.க. முத்து அவர்கள் பயணித்தவர்; அவர்தம் பிரிவால் துயரத்திற்கு ஆளாகியிருக்கும் குடும்பத்தினருக்கும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
19.7.2025