டமஸ்கஸ் ஜூலை 19அமெரிக்காவின் சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேலும் சிரியாவும் சண்டைநிறுத்தத்துக்கு உடன்பட்டுள்ளதாக சிரியாவுக்கான அமெரிக்கத் தூதர் டாம் பராக் தெரிவித்துள்ளார்.
சமீப நாட்களாக இஸ்ரேல் சிரியா மீது பெரும் தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிரியாவின் சுவேடா (Sweida) வட்டாரத்தில் உள்ள ட்ரூஸ் (Druze) சமூகத்தினருக்கு ஆதரவாகவே இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது. சுவேடாவில் ட்ரூஸ் சமூகத்திற்கும் பிற சிறுபான்மை சமூகங்களுக்கும் இடையே மோதல்கள் நிலவி வருகின்றன. இஸ்ரேலிலும் ட்ரூஸ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.