மலேசியா, ஜூலை19- மலேசியாவிற்கான அமெரிக்கத் தூதராக நிக் ஆடம்ஸை அதிபர் டிரம்ப் நியமித்தார். இவர் பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலில் இஸ் ரேலுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்தவர் மேலும் தொடர்ந்து இனவாத பேச்சில் சிக்கியவர் ஆகையால் இவரது நியமனத்தை எதிர்த்து மலேசியாவில் போராட்டம் வெடித்து உள்ளது.
நிக் ஆடம்ஸ்
அதிபர் டிரம்ப் தொடர்ந்து தனக்கு விசுவாசமான நபர்களை வெளிநாட்டுத் தூதர்களாக நியமித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக மலேசியாவிற்கான அமெரிக்கத் தூதராக நிக் ஆடம்ஸ்ஸை நியமித்தார். .
நிக் ஆடம்ஸ் 3 ஆண்டு களுக்கு மேல் தொடரும் பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேல் தாக்குதல் குறித்து இஸ்ரேலுக்கு ஆதரவான கருத்தை தொடர்ந்து கூறிவருகிறார். ஆகையால் நிக் ஆடம்ஸின் நியமனத்தை எதிர்த்து கோலாலம்பூரில் உள்ள அமேரிக்க தூதரகம் முன்பாக பதாகைகளை ஏந்தி மலேசியர்கள் போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டம் காரணமாக பாதுகாப்புக் காகக் காவல்துறை அதி காரிகள் நிறுத்தப்பட்டனர்.
ஆடம்ஸ் ஆஸ்திரேலி யாவில் பிறந்திருந்தாலும் அவர் அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுள்ளார். தீவிர வலது சாரி சித்தாந்தத்தை உடைய ஆடம்ஸ் இனவாதக் கருத்துகளை தொட்ர்ந்து தெரிவித்து வருபவர். இந்த நிலையில் ஆடம்ஸின் வருகையை அங்கீகரிப்பதா இல்லையா என்று முடிவெடுக்கக் கூடுதல் அவகாசம் தேவை என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.