பெலாரஸ், ஜூலை 19- அதிநவீன டிஜிட்டல் உலகில், ஒருபுறம் அறிவியலும் தொழில்நுட்பமும் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனால் மறுபுறம், சில மூடநம்பிக்கைகள் எப்படி ஒரு சமூகத்தை ஆட்டிப்படைக்கின்றன என்பதற்கு சமீபத்திய ‘லபுபு’ பொம்மை சர்ச்சை ஒரு தெளிவான எடுத்துக்காட்டாக உள்ளது
லபுபு பொம்மை
பிரபல மொம்மை நிறு வனமான போப் மார்ட் புதிதாக குழந்தைகள் விளையாடும் லபுபு பொம்மைகளை அறிமுகப் படுத்தி உள்ளன. 300க்கும் அதிகமான வடிவங்களில் இந்த பொம்மைகளை வெளியிட்டுள்ளது. இந்த பொம்மைகள் செயற்கை நுண்ணறிவு மூலம் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பார்ப்பதற்குப் பழங்கால நாட்டுப்புறக் கதைகளில் வரும் தீயசக்தியின் தேவதைகள் போல் இதை வீட்டில் வைத்தால் கேடு வரும் என்று வதந்தி பரவியதால் அப்பொம்மைகள் தீயிட்டு எரிக்கப்பட்டு வருகின்றன.
மத்திய அய்ரோப்பிய நாடுகளில் நாட்டுப்புறக் கதைகளில் வரும் தீய சக்தியின் தேவதை போன்று இருப்பதாக கூறி குரோசியா, ருமா னியா உள்ளிட்ட மத் திய அய்ரோப்பிய நாட்டு மக்கள் தங்கள் வீடுகளில் வைத்திருந்த ‘லபுபு’ பொம்மைகளை தீயிட்டு எரிக்கத் தொடங்கி விட்டனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அதிர்ச்சியை யும் ஏற்படுத்தியுள்ளன.
இதற்கு பொம்மை தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது நவீன செய்ற்கைநுண்ணறிவு மூலம் தனித்துவமான அழகியலைக் கொண்ட இந்தப் பொம்மைகளை ரசியுங்கள் குழந்தைகளை அவர்களின் போக்கில் பொம்மைகளோடு விளையாட விடுங்கள் டிஜிட்டல் உலகில் மூடநம்பிக்கை பரப்பும் மூளையற்றவர்களின் சிந்தனைக்கு இலக்காகி விடாதீர்கள் என்று கூறியுள்ளது.