இந்தியாவில் செயல்பட்டுவரும் தனியார் எரிசக்தி நிறுவனத்திற்கு பொருளாதார தடைவிதித்த அய்ரோப்பிய ஒன்றியம் பொருளாதாரக் கொள்கை பலவீனமானதால் இந்தியாவிற்கு பேரிழப்பு

Viduthalai

மாட்ரிட், ஜூலை 19- ரஷ்யாவின் மிகப் பெரிய எரிசக்தி நிறுவனமான ‘ரோஸ்நெஃப்ட்’ நிறுவனத் துக்குச் சொந்தமான இந்தியாவிலுள்ள எண் ணெய் சுத்திகரிப்பு நிறுவனத் தின் மீது பொருளாதார தடையை அய்ரோப்பிய ஒன்றியம் நேற்று (18.7.2025) விதித்தது. மேலும், கச்சா எண்ணெய்க்கான விலை உச்ச வரம்பையும் அய்ரோப்பிய யூனியன் குறைத்துள்ளது.

பொருளாதாரத் தடை

உக்ரைன் மீது ரஷ்யா போரை தீவிரமாக தொடா்ந்துவரும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா, அய்ரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு வகைகளில் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. தற்போது ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வா்த்தகத்துக்கு தடை ஏற்படுத்தும் வகையில், ரோஸ்நெஃப்ட் நிறுவனம் மீது புதிய பொருளாதாரத் தடையை அய்ரோப்பிய யூனியன் விதித்துள்ளது.

மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்ததைத் தொடா்ந்து, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கிய பல நாடுகள், இறக்குமதியை நிறுத்தின. சில நாடுகள் இறக்குமதி அளவைக் குறைத்தன. இந்தச் சூழலை சாதகமாக்கி ரஷ்யாவிட மிருந்து தொடா்ந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. மொத்த இறக்குமதியில் 40 சதவீதம் அளவுக்கு ரஷ்யாவிடமிருந்து இந்தியா தற்போது செய்து வருகிறது. இதனால், இந்திய எண்ணெய் சுத்தி கரிப்பு நிறுவனங்களும் பலனடைந்து வருகின்றன. மேலும், ரோஸ்நெஃப்ட் நிறுவனத்துடன் மிகப் பெரிய எண்ணெய் விநி யோக ஒப்பந்தத்தையும் இந்தியா மேற்கொண்டது.

இந்நிலையில், ரஷ்யா வுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில், ரஷ்ய வங்கிகளுக்கு கடன் வழங்குவதில் கட்டுப்பாடுகளை அய்ரோப்பிய யூனியன் விதித்துள்ளதோடு, குஜராத் மாநிலம் வாடிநாரில் உள்ள ரோஸ்நெஃப்ட் நிறு வனத்துக்குச் சொந்தமான மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான நயாரா எரிசக்தி நிறுவனம் மீது அய்ரோப்பிய யூனியன் பொருளாதார தடையை புதிதாக விதித்துள்ளது. மேலும், கச்சா எண் ணெய்க்கான விலை உச்ச வரம்பையும் குறைத் துள்ளது. இத் தகவலை, அய்ரோப்பிய யூனியனின் வெளியுறவுக் கொள்கை தலைவா் காஜா கல்லாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று (18.7.2025)பதிவிட்டார்.

அய்ரோப்பிய யூனியன் தற்போது விதித்துள்ள பொருளாதாரத் தடை காரணமாக, அய்ரோப்பிய நாடுகளுக்கு பெட்ரோல், டீசலை நயாரா இனி ஏற்றுமதி செய்ய முடியாது.

இந்தியாவிற்கு இழப்பு

ஏற்கெனவே, இந்த நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரண மாக, கச்சா எண்ணெய் விலை உச்சவரம்பு பீப்பாய் ஒன்றுக்கு 60 டாலா் என்ற அளவுக்கு குறைந்தது. தற்போது, பீப்பாய் ஒன்றுக்கு 50 முதல் 45 டாலா் அளவுக்கு விலை உச்ச வரம்பை அய்ரோப்பிய யூனியன் குறைத்திருக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோடி அரசு பதவி ஏற்றது முதல் தனிப்ட்ட முதலாளிகளின் நலனுக்காக தொடர்ந்து இந்தியா தன்னுடைய வெளியு றவுக் கொள்கைகளை மேலை நாடுகளின் போக்கிற்கு ஏற்றவாறு மாற்றிகொண்டே வந்தது. அதன் விளைவு பாகிஸ்தான்-இந்தியா போரில் அமெரிக்காவின் நேரடித்தலையீடு தற்போது இந்தியாவில் இயங்கும் நிறுவனத்திற்கே பொருளாதார தடை போடும் அளவிற்கு நமது வெளியுறுவுகொள்கை பலவீனமாகிவிட்டதாக அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *