ஜெயங்கொண்டம், ஜூலை 18– 16.7.2025 அன்று ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நான்கு வண்ணமான சிவப்பு (பெரியாரிசம்), மஞ்சள் (மதச்சார்பின்மை), நீலம் (பகுத் தறிவாளர்), பச்சை (மனித நேயம்) ஆகிய அணிகளுக்கு அணி தலைவர் மற்றும் அணித் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் பள்ளி முதல்வர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தேர்தல் கண்காணிப்பாளரின் முன்னிலையில் பள்ளியின் முதல்வர் தன் முதல் வாக்கினை செலுத்தி தேர்தலை துவக்கி வைத்தார்.
‘என் ஓட்டு என் உரிமை’
தேர்தலின் முக்கியத்துவத் தைப் பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் ‘என் ஓட்டு என் உரிமை’ என உணர்த்தும் வகையில் தேர்தலில் ஆறு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மிகவும் அமைதியான முறையில் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
பள்ளி மாணவத் தலை வராக பன்னிரண்டாம் வகுப்பில் பயிலும் மாணவர் கோகுல கிருஷ்ணன் துணைத் தலைவராக பதினொன்றாம் வகுப்பில் பயிலும் மாணவி மனுஷியா ஆகிய இருவரையும் மாணவர்கள் தேர்ந்தெடுத்தனர்.
நீல வண்ண அணியின் தலைவராக மாணவர் அகில னும் துணைத் தலைவராக சிறீதாட்சாயினியும் வெற்றி பெற்றனர். பச்சை வண்ண அணியின் தலைவராக மாணவர் முகமது ராசித்தும் துணைத் தலைவராக மாணவி வினிசியும் வெற்றி பெற்றனர்.
சிவப்பு வண்ண அணியின் தலைவராக மாணவர் இலக்கியதாசும் துணைத் தலைவராக மாணவி தீபஜோதியும் வெற்றி பெற்றனர். மஞ்சள் அணியின் தலைவராக மாணவர் தாமரை செல்வனும் துணை தலைவராக மாணவி இனியாவும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பள்ளியின் முதல்வரும் இருபால் ஆசிரியர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.