பீஜிங், ஜூலை 18– சீனாவின் ஹுவாய்ஹூவா நகரில் பல் கலைக்கழக இறுதித்தேர்வில் மாணவர் 750 மதிப்பெண்களுக்கு 575 மதிப்பெண்கள் எடுத்ததால் தனது பெற்றோரால் வீட்டைவிட்டு விரட்டப்பட்டார்.
மேலும் கதவைத் திறக்க அவருக்கான பாஸ்வேர்டையும் அவரது விரல் ரேகைப் பதிவையும் பெற்றோர் அழித்துவிட்டனர் இதனால் அவர் மீண்டும் வீட்டிற்குள் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளியேற்றப்பட்ட மாணவர் தலை சிறந்த மாணவர் என்று கூறப்படுகிறது. இருப்பினும், சீனாவின் உயரிய பல்கலைக்கழகங்களில் சேர இந்த மதிப்பெண்கள் போதாது என பெற்றோர் அஞ்சியுள்ளனர்.
சிறுவயதிலிருந்தே கல்வியில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று வந்த மகன், அண்மைக் காலமாக அலைபேசியில் அதிக நேரம் விளையாடி வருவதாகவும், தங்கள் பேச்சைக் கேட்டு ஒழுங்காகப் படிக்காததாலேயே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அலைபேசியில் அதிக நேரம் செலவிடும் இளையோருக்கு எனது மகன் ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்பதற்காக இதைச் செய்தோம். அவனை வீட்டில் அனுமதிப்பது குறித்து பிறகு முடிவு செய்வோம் என்று அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.