சென்னை, ஜூலை 17– சுகாதாரப் பராமரிப்பு அறிவியல் கல்வி பயிலும் மாணவர்கள் இரக்கமும், திறமையும் கொண்டவர்களாகத் திகழவும் முயற்சிக்க வேண்டும் என ‘நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஃபார் எம்பவர்மெண்ட் ஆஃப் பேர்சன்ஸ் வித் மல்டிபிள் டிஸ்எபிலட்டிஸ்’ நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் நசிகேதா தெரிவித்தார்.
“சுகாதாரப் பராமரிப்பு என்பது வெறும் அறிவையும் திறன்களையும் பற்றியது மட்டுமல்ல; அது இரக்கம், மீள்தன்மை மற்றும் நெறிமுறைகள் பற்றியது” என்று எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் துணைவேந்தர் டாக்டர் சி. முத்தமிழ்செல்வன், காட்டங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற புதிய மாணவர்களுக்கான வரவேற்பு விழாவில் தெரிவித்தார்.
மருத்துவ மற்றும் சுகாதார அறிவியல் துறைகளில் புதிதாக சேர்ந்த மாணவர்களை இந்த நிகழ்ச்சியில் முறைப்படி வரவேற்கப்பட்டனர். பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, பார்மசி, பொது சுகாதாரம் மற்றும் சுகாதார அறிவியல் பிரிவுகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட புதிய மாணவர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.
நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஃபார் எம்பவர்மெண்ட் ஆஃப் பேர்சன்ஸ் வித் மல்டிபிள் டிஸ்எபிலிட்டிஸ் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் நசிகேதா ரூட் பேசுகையில், “இது போட்டிக்கான காலம் அல்ல, இணைந்து செயல்படுவதற்கான காலம். பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்குள்ள நவீன சுகாதாரப் பராமரிப்பு மருத்துவர்கள், சிகிச்சையாளர்கள், மருந்தாளர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிபுணர்கள் ஆகியோருடன் ஒன்றிணைந்து கற்றுக்கொள்வதால், ஒரு தனித்துவமான கல்வி நிறுவனமாக இது விளங்குகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அனைவரும் ஒன்றாக வளரவும், ஒன்றாக உயரவும், சுகாதார அறிவியல் கல்வி பயிலும் மாணவர்கள் இரக்கமும் திறமையும் கொண்டவர்களாகத் திகழவும் முயற்சிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.