நியூயார்க், ஜூலை 17– அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) மற்றும் போயிங் நிறுவனம் ஆகியவை, போயிங் விமானங்களில் எரிபொருளை இயந்திரங்களுக்கு அனுப்புவதை கட்டுப்படுத்தும் ‘சுவிட்ச்’களை மேம்படுத்த முடிவு செய்து உள்ளனர்.
விமான விபத்து
அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற விமானம் 12.06.2025 அன்று புறப்பட்ட சில வினாடிகளில் கீழே விழுந்து எரிந்து சாம்பலானது. இதில் பயணம் செய்தவர்களோடு விமானம் விழுந்த மருத்துவமனை தங்கும் விடுதி கட்டடத்தில் இருந்தவர்களும் உயிரிழந்தனர். விமானத்தில் பயணம் செய்த ஒருவர் மட்டுமே உயிர்தப்பினார்.
இதற்கு காரணம் அந்தவிமானத் தில் எரிபொருள் அனுப்பும் சுவிட்ச் கடைசி நிமிடத்தில் அணைக்கப் பட்டது என்று முதல் கட்ட விசார ணையில் தெரிய வந்தது.
இந்த நிலையில் சுவிட்ச்களின் கட்டுப்பாட்டு அம்சங்களைச் சரிபார்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதை அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் நிராகரித்து விட்டது.
ஆணையம் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளதாவது ”எரிபொருள் விநியோகத்தைத் தொடங்கவோ நிறுத்தவோ விமானிகள் கட்டுப்பாட்டு விசையை இழுக்க வேண்டும். ஆனால், விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நொடிகளில், இரு விசைகளும் அணைத்து வைக்கும் நிலைக்கு மாற்றப்பட்டிருந்தன.
குரல் பதிவுகளில், ஒரு விமானி மற்றொரு விமானியிடம், “விசையை ஏன் நகர்த்தினாய்?” என்று கேட்பதும், அதற்கு மற்றவர், “நான் அப்படிச் செய்யவில்லை” என்று பதிலளிப்பதும் பதிவாகியுள்ளது. விபத்துக்குப் பிறகு விமானத்தை ஆய்வு செய்தபோது, விசைகள் சுவிட் அணைக்கப்பட்டு அதனை மீண்டும் இயக்கும் நிலையில் இருந்ததாகவும், விமானிகள் அதை மாற்ற முயற்சித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மேம்படுத்த முடிவு
மேலும் விமானிகள் விசைகளைத் தவறுதலாக நகர்த்திவிடாமல் இருக்க, அவற்றைச் சோதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக ஏர் இந்தியாவின் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த விமான விபத்து, எரிபொருள் விநியோக சுவிட் குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது, மேலும் இது தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண் டியதன் அவசியத்தை உணர்த்துகிறது என்றனர். இதற்காக எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்களை மேலும் மேம்படுத்தும் வகையில் ஆலோசனை நடந்துவருவதாக அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் ஆலோசனை நடத்துவதாக கூறி யுள்ளது.