சூடான், ஜூலை 17- சூடானில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஜுலை 10-14ஆம் தேதி வரை நார்த் கோர்டோபன் மாகா ணத்தில் குழந்தைகள், கர்ப்பிணிகள் உட்பட 300 பேர் உயிரிழந்ததாக அய்.நா. வேதனை தெரிவித்து ள்ளது.
தாக்குதலில் அப்பாவி மக்களின் வீடுகள், பள் ளிகள் இலக்குகளாக அமை வதற்கு கண்டனம் தெரி வித்த அய்.நா., பன்னாட்டு மனிதாபிமான சட்டத்துக்கு கட்டுப்பட்டு சூடான் ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்கள் செயல்பட கேட்டுக் கொண்டுள்ளது.