அய்.நா., பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல்; கடும் தண்டனை பெற்றுத்தர இந்தியா வலியுறுத்தல்

Viduthalai

நியூயார்க், ஜூலை 17- “அய்.நா. படையினர் தாக்கப்படும் சம்பவங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என அய்.நா.வில் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பர்வதநேனி ஹரிஷ் தெரிவித்தார்.

நியூயார்க்கில் உள்ள அய்.நா., தலைமையகத்தில் நடந்த உயர்மட்ட ஆலாசனைக் கூட்டத்தில், இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பர்வதநேனி ஹரிஷ் பேசியதாவது:

அய்க்கிய நாடுகளின் அமைதி காப்புப் படையினருக்கு எதிராக குற்றங்கள் இழைக்கப்படும் வழக்குகளில் நீதி கிடைக்க வேண்டும்.

ஆபத்து மிகுந்த போர்க்களங்களில் அமைதி காக்கும் பணி மேற் கொள்ளும் அய்.நா., படையினரின் பணி, மிகுந்த சிக்கலானது. ஆனால், அய்.நா., படையினர் தாக்கப்படும் குற்றங்களில், பெரும்பாலானவற்றில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. இத்தகைய பொறுப்பற்ற தன்மை, பன்னாட்டு அமைதி காப்பு நடவடிக்கைகளை கடுமையாக பாதிக்கிறது. குற்றவாளிகளை ஊக்குவிப்பதாக உள்ளது.

எனவே, அய்.நா., படையினர் தாக்கப்படும் சம்பவங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதை நிறைவேற்றுவது நமது பொதுவான கடமை.

உலகளாவிய அய்.நா. அமைதி நடவடிக்கைகளின் செயல் திறனும், நம்பகத்தன்மையும் தான் நமது எதிர்காலத்திற்கான அடிப்படையாகும். இவ்வாறு அவர் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *