கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோயில் நூருல் இஸ்லாம் பல்கலைக் கழகத்தின் (Deemed University) மேனாள் துணைவேந்தராகவும், இணைவேந்தராகவும், தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் உறுப்பினராகவும், தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் உறுப்பினராக இருந்தவரும், திராவிட இயக்க உணர்வாளரும், தந்தை பெரியாரிடத்தில் மிகுந்த மரியாதை உடையவரும், நம்மிடத்தில் நட்புப் பாராட்டியவரும், பெரியார் திடலுக்கு நெருக்கமாக இருந்தவருமான மதிப்புக்குரிய முனைவர்
ஆர். பெருமாள்சாமி அவர்கள் மறைவுற்றார் (15.7.2025) என்பதை அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
அவர் மறைவால் துயருறும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
17.7.2025