சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி பீகாரில் 35.5 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட உள்ளன

Viduthalai

புதுடில்லி, ஜூலை 15 பீகார் மாநிலத்தில் வரவிருக்கும் சட்ட மன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்  விளைவாக, 35.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவுள்ளன. இது மாநிலத்தின் ஒட்டுமொத்த வாக்காளர்களில் 4.5 சதவீதத்திற்கு மேல் ஆகும்.

வாக்காளர் கணக்கெடுப்பு

வீடு வீடாக நடத்தப்பட்ட வாக் காளர் பட்டியல் கணக்கெடுப்பில், உயிரிழந்த 12.5 லட்சம் வாக்காளர்கள் (1.59 சதவீதம்), பீகாரில் இருந்து நிரந்தரமாக வெளியேறிய 17.5 லட்சம் பேர் (2.2 சதவீதம்), மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவு செய்யப்பட்ட 5.5 லட்சம் வாக்காளர்கள் (0.73 சதவீதம்) ஆகியோரின் பெயர்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், நேபாளம், வங்கதேசம், மியான்மர் போன்ற அண்டை நாடுகளைச் சேர்ந்த சிலர் வாக்காளர் பட்டியலில் இருப்பது தெரியவந்துள்ளது, இவர்களின் பெயர்கள் முழு விசாரணைக்குப் பின் நீக்கப்படும்.

இந்தத் திருத்தப் பணி ஜூன் 24, 2025 அன்று தொடங்கப் பட்டு, ஜூலை 25, 2025-க்குள் முடிவடைய உள்ளது. ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 1 வரை உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபனை களைப் பதிவு செய்யலாம், மேலும் இறுதி வாக்காளர் பட்டியல் செப் டம்பர் 30, 2025 அன்று வெளி யிடப்படும்.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

இந்தப் பணியை காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. RJD தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்தத் திருத்தம் “பின்கதவு வழியாக NRC (தேசிய குடிமக்கள் பதிவேடு) அமல்படுத்துவதற்கு” உருவாக்கப்பட்டதாக குற்றம்சாட்டி யுள்ளார். ஒவ்வொரு தொகுதியிலும் 1 சதவீத வாக்காளர்கள் நீக்கப் பட்டால்கூட, ஒரு தொகுதிக்கு சுமார் 3,200 வாக்காளர்கள் பாதிக்கப்படுவர் என்று அவர் எச்சரித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் இந்தப் பணியை தொடர அனுமதித்தாலும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றை சரிபார்ப்பு ஆவணங் களாக பயன்படுத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், இந்த ஆவணங்கள் வாக்காளர் தகுதியை உறுதிப் படுத்துவதற்கு மட்டுமே பயன்படும், குடியுரிமையை நிரூபிக்காது என்று ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையம், இந்தத் திருத்தம் வாக்காளர் பட்டியலின் ஒருமைப்பாட்டை உறுதி செய்யவும், இறந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், மற்றும் புனையப்பட்ட பதிவுகளை அகற்றவும் மேற்கொள்ளப்படுவதாக வலியுறுத்துகிறது. இருப்பினும், எதிர்க்கட்சிகள் இதை அரசி யல் உள்நோக்கத்துடன் மேற்கொள் ளப்படும் முயற்சியாகக் கருது கின்றன.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *