சிங்கப்பூர்,ஜூலை 16- பன்னாட்டு கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்குப் பிடித்தமான நகரங்கள் குறித்த கருத்துக்கணிப்பில், தென் கொரியத் தலைநகர் சியோல் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தை ஜப்பான் தலைநகர் டோக்கியோ பெற்றுள்ளது. இந்த இரண்டு நகரங்களும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டில் படிக்கச் செல்லும் மாணவர்கள் தங்களுக்கு அனைத்து வசதிகளும் மிக்க நகரங்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில், க்யூ.எஸ். (QS) என்ற அமைப்பால் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் முதல் இரண்டு இடங்களை தென்கிழக்கு ஆசிய நாடுகள் பிடித்துள்ளன.
க்யூ.எஸ். அமைப்பு வெளி யிட்ட இந்தப் பட்டியலில், நகரங்கள் ஆறு முக்கிய அம்சங்களைக் கொண்டு மதிப் பிடப்பட்டன:
* பல்கலைக்கழகங்களின் உலகளாவிய இணைப்பு: அந் நகரிலுள்ள பல்கலைக்கழகங்களின் சர்வதேசத் தரம் மற்றும் இணைப்பு.
* மாணவர் கண்ணோட் டம்: நகரம் குறித்து மாணவர் களின் பொதுவான கருத்து மற்றும் அனுபவங்கள்.
* வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கை: அந்நகரத்தில் படிக்கும் வெளிநாட்டு மாண வர்களின் எண்ணிக்கை.
* வேலைவாய்ப்புத் தரம்: அங்கு படித்த மாணவர்களைப் பற்றி பொதுவாகப் பெருநிறு வனங்களின் கருத்து.
* மாணவர் ஈர்ப்பு: புதிய மாணவர்களை ஈர்க்கும் நகரத்தின் திறன்.
* வாழ்க்கைச் செலவு: நகரத்தில் வாழ்வது மாணவர் களுக்கு எவ்வளவு எளிதானது மற்றும் செலவீனம் குறைவு.
இந்தக் காரணிகளின் அடிப்படையில் முதலிடத்தில் தென் கொரியத் தலைநகர் சியோல் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஜப்பான் தலைநகர் டோக்கியோ இடம்பிடித்துள்ளது.
பட்டியலில் இதர இடங்க ளைப் பிடித்த நகரங்கள்:
- லண்டன் மியூனிக் மெல்போர்ன் சிட்னி பெர்லின் பாரிஸ் சூரிச் (Zurich) வியன்னா
அமெரிக்க நகரங்களுக்குப் பின்னடைவு:
இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் அமெரிக்காவில் ஒரு நகரம் கூட இடம் பெறவில்லை. தொடர்ந்து பல ஆண்டுகளாக அமெரிக்காவின் சில நகரங்கள் முதல் 10 இடங்களில் பிடித்திருந்த நிலையில், புதிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கொள்கைக் கெடுபிடிகள் காரணமாக அமெரிக்க நகரங்கள் மாணவர்களின் விருப்பமான பட்டியலில் இருந்து கீழிறங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.