புவனேஸ்வரம், ஜூலை.16- ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பேராசிரியர் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத தால் தீக்குளித்த மாணவி, 3 நாள் உயிர் போராட்டத்துக்குப் பின் இறந்தார்.
தீக்குளித்தார்
ஒடிசாவின் பாலசோர் பகுதி யில் பக்கீர் மோகன் சுயநிதி கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு கல்வியியல் பிரிவில் 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி, பேராசிரியர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இது குறித்து கல்லூரி நிர்வாகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மாணவி கடந்த 12.7.2025 அன்று தீக்குளித்துவிட்டார்.
இதில் அவரது உடல் முழுவதும் காயம் அடைந்து கருகினார். 95 சதவீத தீக்காயம் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரி வித்தனர். முதலில் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர் பின்னர், புவனேஷ்வரம் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். அங்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மாணவியை நேரில் பார்வை யிட்டது குறிப்பிடத்தக்கது.
3 நாள் உயிர்ப் போராட்டம்…
இந்த நிலையில் தீவிர சிகிச் சையில் இருந்த அந்த மாணவி 3 நாள் உயிர்ப் போராட்டத்துக்குப் பின்பு இறந்து போனார்.
தகவல் அறிந்த, பிஜு ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் இரவிலேயே மருத்துவமனை வளாகத்தில் கூடி போராட்டம் நடத்தினர். காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தி மாண வியின் உடலை ஏற்றிச்சென்று குடும் பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
நிவாரணம்
மாணவியின் மரணத்துக்கு மாநில முதலமைச்சர் மோகன் சரண் மாஜி இரங்கல் தெரிவித்தார். மேலும் ரூ.20 லட்சம் நிவார ணம் அறிவித்தார். பின்னர் அவர் கூறுகையில் “மாணவியின் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் தொடர்புள் ளவர்கள் அனை வரும் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள் என்று மாணவியின் குடும்பத்தினருக்கு நான் உறுதியளிக்கிறேன்” என்றார்.
ராகுல்காந்தி கண்டனம்
மக்களவை எதிர்க்கட்சி தலை வரும், காங்கிரஸ் மூத்தவருமான ராகுல்காந்தி, மாணவியின் மரணம் குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் இரங் கல் பதிவு வெளியிட்டார். அதில் பா.ஜனதா ஆட்சியை கடுமையாக சாடியிருந்தார். அவரது பதிவில் கூறி இருப்பதாவது:- அந்த துணிச்சலான மாணவி பாலியல் சுரண்டலுக்கு எதிராக குரல் எழுப்பினார்.இது தற்கொலை அல்ல, இது பா.ஜனதா அமைப்பின் திட்டமிட்ட கொலை.
மோடிஜி, அது ஒடிசாவாக இருந்தாலும் சரி, மணிப்பூராக இருந்தாலும் சரி நாட்டின் மகள்கள் எரிந்துகொண்டிருக்கிறார்கள், உடைந்து போகிறார்கள், இறந்து கொண்டிருக்கிறார்கள். நீங்களோ அமைதியாக இருக்கிறீர்கள். நாடு உங்கள் மவுனத்தை விரும்பவில்லை, அது பதில்களை விரும்புகிறது”
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
கல்லூரி முதல்வர் கைது
காங்கிரஸ் கட்சியின் வேறு பல முக்கிய தலைவர்களும் கண்டன கருத்துக்களை வெளி யிட்டு உள்ளனர். ஒடிசா மாநில காங்கிரஸ் சார்பில் நாளை (17.7.2025) முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இடதுசாரிகள் உட்பட 8 கட்சிகள் முழு அடைப்பை ஆதரிப்பதாக மாநில காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் கூறி உள்ளார்.
மாணவி தீக்குளித்ததையடுத்து மாணவியின் புகார் மீது நடவடிக்கை எடுக்காத கல்லூரி முதல்வர் திலிப் குமார் மற்றும் கல்லூரி கல்வித்துறை தலைவர் சமீராகுமார் ஆகியேர் கைது செய்யப்பட்டனர்.