செய்திச் சுருக்கம்

1 Min Read

ரூ.500 நோட்டுகள் அடுத்த ஆண்டு முதல் செல்லாதா?

உண்மையில்லை
எனத் தகவல்

2026, மார்ச் முதல் 500 நோட்டுகள் செல்லாது என்றும், ஏடிஎம்-களிலும் இந்நோட்டுகளை படிப்படியாக குறைக்க ஆர்.பி.அய் (RBI), வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் பரவியது. ஆனால், இதில் உண்மை இல்லை என ஒன்றிய அரசின் தகவல் சரிபார்ப்பகம் (PIB Fact Check) கூறியுள்ளது. இருப்பினும், ரூ.100, 200 நோட்டுகள் ஏடிஎம்களில் அதிகம் இருப்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என்று ஆர்பிஅய் கடந்த ஏப்ரலில் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.

லண்டனில் விமானம் வெடித்து சிதறியது!

கனடாவில் 2 விமானங்கள் மோதி விபத்துக் குள்ளான சில நாள்களிலேயே லண்டனில் விமானம் வெடித்து சிதறியுள்ளது. சவுத் எண்ட் விமான நிலையத்தில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே சிறிய ரக விமானம் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. விமானத்தில் இருந்தவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், விமானத்தில் பயணித்தவர்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

சோறு உண்டு..
ஆனால் வாக்கு கிடையாது!
நிர்வாகி கருத்தினால் பாஜக அதிர்ச்சி

விருதுநகரில் நடைபெற்ற பாஜகவின் பூத் கமிட்டி கூட்டத்தில் நிருவாகி ஒருவர் சொன்ன கருத்தை கேட்ட நயினார் நாகேந்திரன் அதிர்ச்சியடைந்தார். நிருவாகிகளிடம் கள நிலவரம் பற்றி நயினார் கேட்டபோது ‘உங்களுக்கு சோறு கூட போடுறோம். ஆனா ஓட்டுப் போட மாட்டோம்’ என மக்கள் சொல்வதாக நிருவாகி ஒருவர் கூறுகிறார். சட்டென அதிர்ச்சியடைந்த நயினார் கேமரா முன்னாடியா இதை சொல்வது என தலையில் அடித்துக்கொண்டார்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *