ஆக்ரா, ஜூலை 15- ஆக்ரா நகர பாஜக பொதுச்செயலாளரும், வாக்குச்சாவடி முகவர்களின் தலைவருமான ஆனந்த் சர்மா, கட்சியைச் சேர்ந்த முக்கிய பெண் பிரமுகர்களுக்கு ஆபாச காட்சிப் பதிவுகள் மற்றும் செய்திகளை வாட்ஸ்அப் மூலம் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பலமுறை எச்சரித்தும் அவர் தனது செயலை நிறுத்தாததால், கோபமடைந்த பெண்கள் அவரை ஆக்ரா நகர பாஜக தலைமை அலுவலகத்திற்கு வரவழைத்து, செருப்பு மற்றும் விளக்குமாற்றால் தாக்கினர்.
முக்கிய பதவி கிடைக்கும்
ஆனந்த் சர்மா, கட்சியின் முக்கியப் பெண் உறுப்பினர்களின் கைப்பேசி எண்களுக்கு ஆபாச காட்சிப் பதிவுகளை அனுப்பிய தோடு, தனிப்பட்ட வாட்ஸ்அப் செய்திகள் மூலம், “இது போன்று என்னுடன் நடந்து கொண்டால், கட்சித் தலைமையிடம் பேசி முக்கியப் பதவிகளை வாங்கித் தருவேன்” என்று கூறியதாகக் குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த செயல், கட்சிக்குள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின.
பலமுறை எச்சரிக்கைகளுக்கு பிறகும் ஆனந்த் சர்மா தனது செயல்களை நிறுத்தாததால், கோபமடைந்த பாஜக மகளிர் அணியினர், அவரைக் கட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்து, செருப்பு மற்றும் விளக்குமாற்றால் தாக்கினர்.
இந்த சம்பவம் ஆக்ராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் சமூக வலைதளங்களில் இது தொடர்பான காட்சிப் பதிவுகள் வைரலாகி வருகின்றன.
பாஜக கட்சி தலைமை இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.
இப்படி நிகழ்வுகள் பா.ஜ.க.வில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலும் நடந்துள்ளன. “வீட்டுக்கு வீடு வாசப்படி, பா.ஜ.க.விற்கு மாநிலத்திற்கு மாநிலம் செருப்படி” என்கிறார்கள் சமூக ஊடகத்தில்!