திருச்சி, ஜூலை15- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று (15.7.2025) காலை 9.00 மணியளவில், பச்சைத் தமிழர் காமராஜர் அவர்களின் 123ஆவது பிறந்த நாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
மொழி வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில் பள்ளியின் முதல்வர் முனைவர்.க.வனிதா காமராசரின் படத்திற்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவிகள், எஸ்.யுவேரா “காமராசரின் களங்கமில்லா வாழ்வு” என்ற தலைப்பில் சிறப்புரையும், மாணவி டி.தக்சயா “ராஜனுக்கு ராஜர் காமராஜர்” என்ற தலைப்பில் கவிதையும் வழங்கினர்.
காமராஜர் குறித்த பாடல், பொன் மொழி களையும் மாணவர்கள் குழுவாக வழங்கினர்.
பள்ளியின் தமிழ் இலக்கிய மன்றம் சார் பில் நடத்தப்பட்ட கல்வி வளர்ச்சி நாள் போட்டிகளில் பொன் மொழி ஒப்புவித்தல், கையெழுத்துப் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி முதல்வர் பாராட்டுச் சான்றிதழும் பரிசுகளும் வழங்கிச் சிறப்பித்தார்.