சுமத்திரா, ஜூலை 15- இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாநிலத் தில் உள்ள மெந்தவாய் தீவு அருகே படகு ஒன்று கவிழ்ந்ததில் 11 பேரை காணவில்லை.
இந்த விபத்து நேற்று (14.7.2025) இந்தோனேசிய நேரப்படி காலை 9 மணியளவில் கடுமையான புயல் காற்று மற்றும் உயரமான அலைகள் காரணமாக நிகழ்ந்ததாக தேடல் மற்றும் மீட்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
படகில் மொத்தம் 18 பேர் பயணித்தனர், அவர்களில் 10 பேர் உள்ளூர் அரசாங்க அதிகாரிகளாவர். படகு, மெந்தவாய் தீவுகளில் உள்ள சிககாப் என்ற சிறிய நகரிலிருந்து துவாபெஜாட் (Tuapejat) என்ற மற்றொரு நகரத்திற்கு பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்தது. இதுவரை எட்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர், அவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 10 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
தேடல் மற்றும் மீட்பு பணிகளுக்கு இரண்டு படகுகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் ஈடுபடுத் தப் பட்டுள்ளனர். “விபத்து நடந்த இடத்தைச் சுற்றி தேடுதல் பணியைத் தீவி ரப்படுத்தியுள்ளோம்,” என மெந்தவாய் தேடல் மற்றும் மீட்பு அமைப் பின் தலைவர் ரூடி தெரிவித்தார்.
இந்தோனேசியாவில் 17,000-க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டத்தில் பேருந்துகளைப் போன்றே படகு மற்றும் கப்பல் போக்குவரத்து பொதுவானவை, ஆனால் மோசமான வானிலை மற்றும் புயல் போன்ற காரணத்தால் விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.
ஜூலை 2 ஆம் தேதி பாலி தீவுக்கு அருகே கப்பல் கவிழ்ந்த விபத்தில் இந்திய சிறிலங்கா நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர் மற்றும் 17 பேர் காணாமல் போயுள்ளனர், தற்போது மீண்டும் ஒரு கோர விபத்து நிகழ்ந்துள்ளது