வண்டுகளின் படையெடுப்பால் அச்சுறுத்தல் ஒரு லட்சம் புத்தகங்கள் பாதிப்பு

1 Min Read

புதாபெஸ்ட், ஜூலை 15- ஆயிரம் ஆண்டு பழமையான ஆர்ச்சாபே நூலகத்தை வண்டுகளிடமிருந்து காப்பாற்ற ஹங்கேரி அரசு முழு முயற்சியில் இறங்கி உள்ளது

வண்டுகள் படையெடுப்பு

ஹங்கேரியில் பென் னொஹல்மா ஆர்ச்சாபே மடத்தில் அமைந்துள்ள நூலகம், 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. அய்க்கிய நாட்டுக் கல்வி, அறிவியல், கலா சார நிறுவனத்தால் உலக மிகவும் பழமை யான நூலகமாக அங்கீ கரிக்கப்பட்டுள்ளது. சுமார் 4 லட்சம்  புத்தகங்களைக் கொண்ட இந்த நூலகம், தற்போது வண்டுகளின் படையெடுப்பால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி யுள்ளது.

நூலகத்தைச் சுத்தம் செய்த ஊழியர்கள், புத்த கங்களில் வண்டுகளால் ஏற்பட்ட துளைகளைக் கண்டறிந்தனர். இதனால், 1 லட்சம் புத்தகங்கள் பாதிப்பிற்குள்ளாகி உள்ளது. இதனை அடுத்து மற்ற நூல்களை யும் பாதுகாக்க தீவிர முயற்சிகளை மேற் கொண்டுள்ளது. வண்டுகளால் மேலும் சேதமடைவதைத் தடுக்க, புத்தகங்களைஅதை வைத்திருக்கும் அடுக்குகளில் இருந்து அகற்றி சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

சீரமைப்புப் பணி

1,000 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வரும் முக்கிய வரலாற்றுப் பதிவுகளைக் கொண்ட இந்த நூலகம், 15 நூற்றாண் டுகளாகப் பின்பற்றப்படும் கடுமையான விதிமுறை களின் அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்கிறது. இங்கு உள்ள பல நூல்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு லத்தின் மற்றும் போஸ்க், உள்ளிட்ட மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் உடலில் நீண்ட அங்கி மட்டுமே அணிந்து செல்ல அனுமதி உண்டு. இதற்காக நூலகத்தின் வளாகத்தில் பிரத்யோக அங்கி மிகவும் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது.

ஆடைகளில் உள்ள நூல்களின் சிறு துண்டுகள் கூட எழுத்துகளை அழிக் கும் தன்மை கொண்டது என்பதால் வழவழப்பான செம்மறி ஆடுத்தோலால் செய்யப்பட்ட சிறப்பு அங்கி அணிந்துகொண்டு மட்டுமே செல்ல அனுமதி உண்டு  “எந்தச் சூழலிலும் இந்தப் பதிவுகளைப் பாதுகாப்பது எங்கள் கடமை,” என நூலகத்தின் இயக்குநர் தெரிவித்தார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *