சென்னை, ஜூலை 15 கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் 123ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.7.2025) காலை11 மணியளவில் சென்னை அண்ணா சாலை பெரியார் பாலம் (ஜிம்கானா கிளப்) அருகில் உள்ள காமராசர் சிலைக்கு திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு, சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேஷ், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, துணைத் தலைவர் அரும்பாக்கம் சா. தாமோதரன், துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன், மு.இரா. மாணிக்கம், பெரியார் யுவராஜ், இரா.ரவி, த. ராஜா, ஜனார்த்தனம், அப்துல்லா. வடசென்னை மாவட்டச் செயலாளர் புரசை சு. அன்புச்செல்வன், பொதுக் குழு உறுப்பினர் தி.செ.கணேசன், கொடுங்கையூர், கோ.தங்கமணி, திருவொற்றியூர் மாவட்ட தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், கண்மணி துரை, பா.கோபாலகிருஷ்ணன், நா.பார்த்திபன், ச.ராஜேந்திரன். சோழிங்கநல்லூர் மாவட்ட காப்பாளர் ஆர்.டி. வீரபத்திரன், தலைவர் வேலூர் பாண்டு, பி.சி. ஜெயராமன், எம். குருசாமி, பாப்டி விஜயலட்சுமி. தாம்பரம் மாவட்டத் தலைவர் ப. முத்தையன், சு. மோகன்ராஜ், மா. குணசேகரன், ஆவடி மாவட்டம் ச. தமிழ்ச்செல்வன், பெரியார் மாணாக்கன், மதுரை பெரியார் வேலுச்சாமி, தங்க. தனலட்சுமி, த.மரகதமணி மு. பவானி, திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் செ.பெ.தொண்டறம், திராவிடர் கழக விளையாட்டு அணி மாநில அமைப்பாளர் ம. பூவரசன், அ.இளவேனில் மு.ரங்கநாதன், வை.கலையரசன் ஆனந்த், இரா.அருள் பங்கேற்றனர்.