கல்வி வள்ளல் காமராசர் 123ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூர் கீழவாசலில் உள்ள காமராசர் சிலைக்கு தஞ்சை மாவட்டத்தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையில், கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார், இரா.குணசேகரன், மாவட்ட காப்பாளர் மு.அய்யனார் ஆகியோர் முன்னிலையில் கழகப் பொதுச் செயலாளர் வீ .அன்புராஜ் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
மாவட்டத் துணைத் தலைவர் பா. நரேந்திரன், மாநகரத் தலைவர் செ. தமிழ்செல்வன், மாநகர செயலாளர் இரா.வீரக்குமார், கிராமபிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மாநில மாணவர் கழக செயலாளர் இரா. செந்தூரபண்டியன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுபட்டு அ.இராமலிங்கம், மாநகரத் துணைத் தலைவர் ஆ.டேவிட், மாநகரத் துணைச் செயலாளர் இரா.இளவரசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் க. அன்பழகன், கலைச்செல்வன், விஜயன், பழக்கடை கணேசன், விஜயகுமார், திராவிட செல்வன் பொறியாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்தார்.