ஊற்றங்கரை, ஜூலை15- கிருட்டிணகிரி மாவட்டம் ஊற்றங்கரையில் கடந்த 05.07.2025 அன்று நாள் முழுவதும் அடுக்கடுக்கான நிகழ்வுகள் நடைபெற்று கொள்கைப் பிரச்சார திருவிழாவாக வெகு சிறப்புடன் நடைபெற்றது
புதுப்பிக்கப்பட்ட “தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நகர்” பெயர் பலகைத் திறப்பு
ஊற்றங்கரை சேலம் சாலையில் 2016 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நகரில் புதுப்பிக்கப்பட்ட பெயர் பலகைத் திறப்பு விழா காலை 11:30 மணிக்கு ஊற்றங்கரை பேரூராட்சித் தலைவர் பா.அமானுல்லா தலைமையில் திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் “தந்தை பெரியார் வாழ்க!” “தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி வாழ்க!” என்ற ஒலி முழக்கங்களுக்கு இடையே திறந்து வைத்தார்
பெயர் பலகைத் திறந்து வைத்த பின்னர் வழிகாட்டி அரங்கில் நடைப்பெற்ற திறப்பு விழா நிகழ்வில் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் அண்ணா.அப்பாசாமி வரவேற்புரையாற்றி தொடங்கி வைத்தார்.கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் பழ.பிரபு அறிமுக உரையாற்றினார். 15 வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர் எஸ்.குமரேசன் வழிகாட்டி அறக்கட்டளையின் தலைவர் லோகநாதன் சேகர் முன்னிலை வகித்தனர். ஊற்றங்கரை பேரூராட்சித் தலைவர் பா.அமானுல்லா தலைமை வகித்து உரையாற்றினார்
திராவிடர் கழக மாவட்டத் தலை வர் கோ.திராவிடமணி, மாவட்ட செய லாளர் செ.பொன்முடி ஆகியோர் வாழ்த்துரை யாற்றினர்
மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் கருத்துரையாற்ற திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்புரையாற்றினார். சேலம் மாவட்டத் தலைவர் வீரமணி ராஜூ, ஊற்றங்கரை பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மருத்துவர் கந்தசாமி, மணிமேகலை, கதிர்வேல், குப்புசாமி, கண்ணாமணி, காரப்பட்டு ரமேஷ், வழக்குரைஞர் ஜெயசீலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.வருகை தந்த அனைவருக்கும் பயனாடைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது. குறிப்பாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பெயரில் நகர் அமைவதற்கு காரணமாக அமைந்த ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் அண்ணா.அப்பாசாமி அவர்களை பாராட்டி துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.
மண்ணாடிப்பட்டியில் கிளைக் கழகத் துவக்க விழா
மண்ணாடிப்பட்டி கிராமத்தில் திராவி டர் கழகத்தின் கிளைக் கழக தொடக்க விழா, சுயமரியாதை சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் கோணப்பட்டி வே. மாறன் அவர்களுடைய படத்திறப்பு மற்றும் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பாராட்டு விழா 5.7.2025 அன்று நடைபெற்றது.
முன்னதாக அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட செயலாளர் செ.பொன்முடி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மண்ணாடிப்பட்டி கிளை கழகத்தின் தலைவர் ச.சதீஷ் வரவேற்பு ரையாற்ற ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழகத்தின் தலைவர் அண்ணா. அப்பாசாமி தலைமை தாங்கினார்.
கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழக தலைவர் கோ.திராவிடமணி, மாவட்ட செயலாளர் செ.பொன்முடி ஆகியோர் தொடக்க உரையாற்றினார்கள். சுயமரியாதை சுடரொளி கோணப்பட்டி வே.மாறன் அவர்களுடைய படத்தை திறந்து வைத்து திராவிடர் கழகத்தின் காப்பாளர் பழ.பிரபு உரையாற்றினார். அவரை தொடர்ந்து திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் கருத்துரையாற்றினர்
கோணப்பட்டி உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இரண்டு மதிப்பெண்கள் பெற்ற முருக்கந்தாள் பவித்ரன் மண்ணாடிபட்டியைச் சார்ந்த பவ்யா மற்றும் 11ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற ஜெனிஃபர் ஆகி யோருக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் பரிசு வழங்கி கதர் ஆடை அணிவித்தும் பாராட்டினார். துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரசு பெரியார் சிறப்புரை ஆற்றினார்.
திராவிடர் கழகத்தால் தமிழகம் மக்கள் பெற்ற பயன்களையும் திராவிட கழகம் செய்த சாதனைகளையும் பட்டியலிட்டு எழுச்சியுரையாற்றினார் சி.ராஜபாண்டி நன்றியுரையாற்றினார்.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பரப்புரை தெருமுனைக் கூட்டம்
ஊற்றங்கரை நான்கு முனை சந்திப்பில் மாலை 4 மணிக்கு தந்தை பெரியார் சிலையருகில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பரப்புரை தெருமுனைக் கூட்டம் வெகு சிறப்புடன் நடைபெற்றது. ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் அண்ணா.அப்பாசாமி வரவேற்பு ரையாற்ற கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோ.திராவிடமணி தலை மையுரையாற்றினார்.
கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் செ.பொன்முடி மாவட்ட காப்பாளர் பழ.பிரபு மாவட்ட துணைத் தலை வர் வண்டி.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரசு பெரியார் சிறப்புரை ஆற்றினார். இர.தீபக் (எ) பார்த்தீபன், சா.அசோகன் ஆகியோர் சிறப்பு செய்தனர் மாவட்ட இளைஞரணித் தலைவர் சீனிமுத்து.இராஜேசன் நன்றி உரையாற்றினார்.
பன்னாட்டு சிலம்ப போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் விடுதலை வாசகர் வட்டக் கூட்டம்.
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் மாலை 5 மணிக்கு ஊற்றங்கரை வித்யா மந்திர் விருந்தினர் மாளிகையில் “நாளை நமதே” என்னும் தலைப்பிலான பன்னாட்டு சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற ஊற்றங்கரை மாணவர்களுக்குப் பாராட்டு விழாவும் நடைப்பெற்றது.
தலைமை ஆசிரியர் சித.வீரமணி அனைவரையும் வரவேற்று, வரவேற்புரை யாற்றினார். மாநில ஒருங்கி ணைப்பாளர் ஊமை.ஜெயராமன் தலைமை வகித்து உரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் கா.சந்தோஷ், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தீ.வேலுசாமி, ஊற்றங்கரை அரசுப் பள்ளிகள் வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவர் லோகநாதன், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
பன்னாட்டு சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற ஊற்றங்கரை மாணவர்களை பாராட்டி தருமபுரி – கிருட்டிணகிரி மாவட்ட கைப்பந்தாட்ட கழகத்தின் மேனாள் தலை வர் சு.மயில்வாகணன் பாராட்டுரை நிகழ்த்தினார். பன்னாட்டு சிலம்ப போட்டி யில் வெற்றி பெற காரணாமாக இருந்த பயிற்சியாளர்கள் சதாசிவம், ஜீவா, கார்த்தி ஆகியோருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 50 ஆம் ஆண்டு மணவிழா காணும் பாராட்டுரை வழங்கிய தருமபுரி – கிருட்டிணகிரி மாவட்ட கைப்பந்தாட்ட கழகத்தின் மேனாள் தலைவர் சு.மயில்வாகணன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோ.திராவிடமணி மாவட்ட செயலாளர் செ.பொன்முடி ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினர்.
நேபாள நாட்டில் காத்மாண்டுவில் நடைபெற்ற பன்னாட்டு சிலம்ப போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்ற ஊற்றங்கரை மாணவர்களுக்கு விடுதலை வாசகர் வட்டம் சார்பில் பரிசுக் கோப்பை அளித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
நிறைவாக “செயற்கை நுண்ணறிவு அச்சத்திற்குரியதா?” என்கிற தலைப்பில் பரிசுப் பெற்ற மாணவர்களைப் பாராட்டி யும் அதற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள், பயிற்சியாளர்களை பாராட்டி யும் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்புரையாற்றினார்.
நிகழ்வுகளை கழக மாவட்ட காப்பாளர் பழ.பிரபு தொகுத்து வழங்க ஊற்றங்கரை ஒன்றியத் தலைவர். அண்ணா.அப்பாசாமி ஒருங்கிணைத்தார்.