சுகமான தூக்கத்துக்கு எளிய வழிமுறைகள்

Viduthalai
1 Min Read

*பகலில் தூக்கம் 30-40 நிமிடங்கள் மட்டும் போதும்.
*மாலையில் செய்யும் உடற்பயிற்சி இரவில் ஆழ்ந்த தூக்கத்தைக் கொடுக்கும்.
*தூக்கத்தைக் கொடுக்கும் மாத்திரைகளைத் தவிர்க்கவும்.
*இரவு 8 மணிக்கு மேல் காபி, மது அருந்தக் கூடாது, புகைபிடிக்கக் கூடாது.
*படுப்பதற்கு முன்பு வெந்நீரில் குளித்துவிட்டு வெதுவெதுப்பான பால் அருந்தினால் ஆழ்ந்த தூக்கம் வரும்.
*நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்குச் செல்ல வேண்டும்.
*படுக்கை அறை அமைதியான சூழ்நிலையில் சற்று மங்கிய வெளிச்சத்தில் இருப்பது நல்லது.
*படுக்கும் இடத்தை தூங்குவதற்கு மட்டும் பயன்படுத்தவும்.
*படுக்கை அறையில் டி.வி. பார்ப்பதையோ, புத்தகம் படிப்பதையோ தவிர்ப்பது நல்லது.
*படுத்த உடனே 30-45 நிமிடங்களுக்குள் தூக்கம் வரவில்லை என்றால் வானொலி கேட்கலாம்.
*மன உளைச்சலும், கவலைகளும் தூக்கத்தின் எதிரிகள். அதைத் தவிர்க்க சுமார் அரை மணி நேரம் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி *படுக்கைக்குச் சென்றால் ஆழ்ந்த உறக்கம் நிச்சயம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *