புகுஷிமா, ஜூலை 14- ஜப்பானின் புகுஷிமா நகரில் வீடுகளுக்கு நாளிதழ் விநியோக்கும் 52 வயது நபரை கரடிதாக்கியதால் மரணமடைந்தார். காலையில் நடைபயனம் சென்றவர்கள் அங்கே ஒருவர் உடல் கிடப்பதைப் பார்த்து காவல்துறைக்கு புகார் கொடுத்தனர்.
காவல்துறையினர் வந்து பார்த்த போது 52 வயது ஆண் புதரின் அருகே இற்ந்த நிலையில் கிடந்துள்ளார். அவரது உடலில் அதிகமான காயங்கள் இருந்தன. வயிற்றில் கரடி கடித்ததற் கான காயங்களும் காணப் பட்டன. காயங்களைப் பார்க்கும் போது தாக்கி புதரின் அருகே இழுத்துச் சென்ற அடையாளம் இருந்தது.
எச்சரிக்கை
நகர் முழுதும் கரடி நடமாட்டம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது கரடிகளின் இனப்பெருக்க காலம் ஆகையால் ஆண்கரடி குணங்கள் ஆபத்து மிக்கவையாக மாறிவிடும், அக்கரடிகளின் அருகில் செல்லும் போது தனக்கு தீங்கிழைக்க வருவதாக நினைத்து தாக்குதல் நடத்தி விடும். ஆகஸ்ட் இறுதிவரை கரடிகளின் இனப்பெருக்க காலம் ஆகையால்மக்கள் கவனமாய் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது சமையலறைக் கழிவுகளைக் கண்ட இடங்களில் வீச வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். வனப்பாதுகாப்பு அதிகாரிகளால் கே ட்டுக ்கொள்ளப்பட்டனனர்