கீவ், ஜூலை 14- மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே போர் நடந்துவருகிறது. இந்த நிலையில் ஜூலை முதல் வாரம் நடந்த தாக்கு தலில் ரஷ்யா 600 க்கும் மேற்பட்ட ஏவுகணை மற்றும் டிரோன்களை வைத்து தாக்குதல் நடத்தியாக உக்ரைன் கூறியுள்ளது
பெரிய தாக்குதல்
உக்ரைன் ரஷ்ய போரில் ஜூலை மாதம் முதல் வாரத்தில் ரஷ்யாவின் நான்காவது பெரிய தாக்குதலை நடத்தி உள்ளது
இந்த தாக்குதலில் உக்ரைனின் மேற்கு நகரங் களைக் குறிவைத்து நூற் றுக்கணக்கான ஆளில்லா விமானங்களையும் ஏவுகணைகளையும் ரஷ்யா ஏவியது. இத்தாக்குதல் தொடர்பாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறிய தாவது,
ரஷ்யா சுமார் 597 ஆளில்லா விமா னங்களையும் 26 ஏவுகணைகளையும் இந்தத் தாக்குதலில் பயன் படுத்தியது. இவற்றில் 300-க் கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களையும் 25 ஏவுகணைகளையும் உக்ரைன் வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா உக்ரை னுக்கு ராணுவ உதவி களைத் தொடர்ந்து வழங்கி வரும் நிலை யில், ரஷ்யாவின் தாக்கு தல்களும் விடாமல் தொடர்கின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதர் உக்ரைன் தலைநகர் கீவுக்கு செவ்வாய் அன்று பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதனிடையே, ரஷ்யாவுக்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடை களை விதிக்க வேண்டும் என்றும், உக்ரைனுக்குக் கூடுதல் வான் பாதுகாப்பு ஆயுதங்கள் தேவை என்றும் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.