இல்லியாய்ஸ், ஜூலை 14- கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலை மையமாக திகழும் வாட்டிகனில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட போப் லியோ அமெரிக்காவில் தான் சிறுவயதில் வாழ்ந்த வீட்டை பொழுது போக்கு பூங்காவாக மாற்றி பொதுமக்கள் பயன் பாட்டிற்கு தந்துள்ளார்
அமெரிக்காவின் மத்தியப் பகுதியான சிக்காகோவில் உள்ள இல்லியாய்ஸ் புறநகர்ப் பகுதியில் லியோ போப்பின் பெற்றோர் 1949 ஆம் ஆண்டு வீடு வாங்கி இருந்தனர். பின்னர் அந்த வீட்டை 1996 ஆம் ஆண்டு விற்றுவிட்டனர். டோல்ட்டன் என்ற சிறிய ஊரில் மூன்று அறைகளும் பரந்த புற்தரைகளோடு அந்த வீடு அமைந்துள்ளது.
போப் பிறந்து வளர்ந்த வீடு என்பதால் அந்த வீட்டிற்கு புகழ் கூடியது. இந்த நிலையில் அந்த வீட்டின் தற்போதைய உரிமையாளர் அந்த ஊர் மக்களின் வேண்டு கோளின் படி 375,000 டாலருக்கு விற்றுள்ளார். போப் லியோவின் ஆசைப் படி ஊர் மக்கள் அந்த வீட்டை அழகுபடுத்தி வெளிபுறப்பகுதியை பூங்காவாகவும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மாற்றி உள்ளனர். போப் லியோ அமெரிக்காவில் இருந்த போது பயன்படுத்திய பொருட்களையும் நூல்களையும் இங்கு கொண்டுவந்து பார்வைக்கு வைக்கவும் ஊர்மக்கள் திட்டமிட்டு போப்பிடம் அனுமதி கேட்டுள்ளனர்.