கிலாஸ்கோ, ஜூலை14- கீரீன்லாந்து நாட்டில் உள்ள ஒரு கிராமத்திற்கு அருகில் மிகபெரிய பனிப்பாறை நகராமல் உள்ளது. இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூறி அந்த கிராம மக்களை அங்கிருந்து காலிசெய்ய கிரீன்லாந்து அரசு உத்தர விட்டுள்ளது
பனிப்பாறை
வடக்கு கிரீன்லாந்தின் இனாஸூட் என்ற கிரா மத்தில் 200- குடும்பங்கள் வசிக்கிறது.
இந்த அமைதியான பகுதியில், வடதுருவத்தில் இருந்து உடைந்து வந்த பெரிய பனிப்பாறை நிலை கொண்டுள்ளது. இந்தப் பனிப்பாறை சுமார் ஒரு வாரமாக அதே இடத்தில் கிராமத்திற்கு மிகவும் அருகில் இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் அதி காரிகள், பனிப்பாறையை நெருங்க வேண்டாம் என்றும் கிராம மக்க ளுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்தப் பனிப்பாறை உடைந்தால், பெரும் அலைகள் உருவாகி கிராமத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் ஆகவே பனிப்பாறை நகர்ந்து செல்லும் வரை கிராமங்களில் இருந்து மக்களை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி அந்நாட்டு பேரி டர் மேலாண்மை நிர்வாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்
பொதுவாக, பெரிய பனிப்பாறைகள் சில நாட்களில் கடல் நீரோட்டங்களால் நகர்ந்துவிடும். ஆனால் இது நீண்ட நாட்களாக நிலைகொண்டுள்ளது, 2018-ஆம் ஆண்டு இதேபோன்று ஒரு பெரிய பனிப்பாறை இன்னார்சுட் கிராமத்தை நெருங்கியபோது, முன்னெச்சரிக்கையாக குடியிருப்பாளர்கள் பாது காப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அப்போது கடும் காற்று வீசியதால், பனிப்பாறை சில நாட்களில் விலகிச் சென்றது. தற்போது, இந்தப் புதிய பனிப்பாறை நகர்வு குறித்து அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.