ஜம்மு, ஜூலை.14- ஜம்மு காஷ்மீரில் பக்தர்கள் பலர் அமர்நாத் யாத்திரைக்காக பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்ற பேருந்துபிரேக் பிடிக்காததால் அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாயின இந்தநிலையில் அந்த வழியாக சென்றவர்கள் லேசான காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு மாற்றுப் பேருந்தை ஏற்பாடு செய்து யாத்திரையை தொடர வைத்தது.
அமெரிக்கா மத வழிபாட்டுத் தலத்தில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி
வாஷிங்டன், ஜூலை 14 அமெரிக்காவின் கெண்டகி மாகாணம் லெக்சிங்டன் நகரில் கிறிஸ்தவ மதவழிபாட்டுத் தலமான தேவாலயத்தில் ஞாயிற்றுகிழமை அன்று வழக்கமான பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது, தேவாலயத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். மேலும், இருவர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றதாகவும் மேலும் படுகாயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தாகவும் தெரிகிறது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.