புனே, ஜூலை 13– மகாராட்டிராவில் சாங்கிலி மாவட்டத்தில் 14,000 பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டிருப்பது. ஒரு மாவட்டத்தில் இவ்வளவு அதிமான பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ளது, அம்மாநில அரசு சுகாதாரத் துறையில் காட்டிய மெத்தனம் காரணமாக இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது
மகாராட்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தில் தனியார் அமைப்பு ஒன்று சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ஒருலட்சம் பேரில். 14,000 பெண்களுக்கு புற்றுநோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. மகாராட்டிரா அரசில் புற்றுநோய் கண்டறிவதற்கான சஞ்சீவினி என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தனியார் அமைப்புகள் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மருத்துவப் பரிசோதனை நடத்தும் இந்தச் சோதனையில் மத்தியபுனேவில் உள்ள ஹிங்கோலி மாவட்டத்தில் இந்தப்பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது
ஒரு மாவட்டத்திலேயே இவ்வளவு அதிகமான பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவது மிகவும் அதிர்ச்சிகரமான செய்தியாக உள்ளது.
இந்த ஆய்வின் போது, 14,542 பெண்களிடம் புற்றுநோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டன. இவர்களில் 3 பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோயும், 1 பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோயும், 8 பெண்களுக்கு வாய் புற்றுநோய் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டது.
ஹிங்கோலி மற்றும் பிற மாவட்டங் களில் புற்றுநோய் கண்டறிவதற்காக டாடா நினைவு மருத்துவமனையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.
மருத்துவமனை குழு மாதத்திற்கு இருமுறை மாவட்ட மருத்துவமனைகளில் முகாம்களை நடத்தி பெண்களை பரிசோதிக்கும். மேலும், புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சரியான நேரத்தில் சிகிச்சை பெற ஊக்குவிக்கவும், கீழ்மட்டத்தில் புற்றுநோய் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மகாராட்டிரா மாநில அரசு சுகாதாரத்துறை முழுமையாக தனியார் அமைப்புகளை நம்பி உள்ளது. நகரங்கள் அலலாத பகுதிகளில் தனியார் அமைப்புகள் செல்லாமல் நகரங்களிலேயே பரிசோதனை நடத்தி அறிக்கைகள் வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில் முதல் முதலாக உள்மாவட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு சோதனையிலேயே இவ்வளவு பாதிப்புகள் காணப்படுவது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது அதற்கான சிகிச்சைக்காக நகரங்களை நாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இதர மாவட்டங்களிலும் சோதனைகள் தொடரும் போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று சுகாதார நிபுனர்கள் கவலைப்படுகின்றனர்.