ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குளறுபடிகளின் மொத்த உருவம் மேனாள் நீதிபதிகள் கருத்து

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, ஜூலை13– ‘ஒரே நாடு  ஒரே தேர்தல்’ திட்டத்திற்கான மசோதாக்களில் பல் வேறு குறைபாடுகள் உள்ள தாகவும், மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இதில் கருத்து தெரிவிக்க உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதிகளான டி.ஓய்.சந்திரசூட், ஜே.எஸ்.கெஹர் ஆகியோர் அழைக்கப் பட்டிருந்தனர். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு மசோதாக்களிலும் பல்வேறு குறை பாடுகள் உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு கட்டுப்பாடற்ற அதிகாரங்களை வழங்கக் கூடாது. தற்போதைய மசோதாவில் தேர்தல் ஆணையத்துக்கு வழங் கப்பட்டுள்ள வானளா விய அதிகாரங்களை கட்டுப்படுத்த உரிய நடைமுறைகள் தேவை. தற்போதைய நிலையில் மசோதா நிறைவேற்றப் பட்டால் அது நீதிமன்றத்தால் ரத்து செய் யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

எனவே, மசோதாக் களில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் இருவருமே வலியுறுத்தினர். அய்ந்து ஆண்டு காலம்தேர்வு செய்யப்பட்ட எந்த மாநில அரசையும் எக்காரணம் கொண்டும் பாதியில் கலைக்கக் கூடாது என்று ஜே.எஸ்.கெஹர் அறிவுறுத்தினார். தேர்வு செய்யப்பட்ட அரசு நல்லாட்சி வழங்குவதற்கு 5 ஆண்டுகளை முழுமையாக வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *