நேற்று (12.07.2025) பெங்களூரில் நடைபெற்ற இன்டர்நேஷனல் பிசினஸ் கான்பிரன்ஸ் நகரத்தார்-2025 என்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்து விழா சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பேசுகையில் நகரத்தாரின் வாழ்வியல் முறைகள் பற்றியும் சிவகங்கைச் சீமையில் அவர்கள் ஆற்றிய பங்கு பற்றியும் விளக்கி எடுத்துரைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் உட்பட கருநாடக மாநில உயர் அலுவலர்கள் நகரத்தார் பலர் கலந்து கொண்டனர்.