‘ஜன்தன் யோஜனா’ திட்டம் கோடிக்கணக்கான வங்கிக் கணக்குகளில் வரவு – செலவு பரிவர்த்தனை நடைபெறவில்லை விடை தெரியாமல் விழிக்கும் ஒன்றிய அரசு

2 Min Read

புதுடில்லி ஜூலை 12 ‘வீட்டுக்கு ஒரு வங்கி கணக்கு’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில், பிரதமரின் ‘ஜன்தன் யோஜனா’ திட்டம் எனப்படும் பிரதமரின் மக்கள் வங்கிக் கணக்கு திட்டத்தை 2014-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், ‘ஜீரோ பேலன்ஸ்’ (வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை) என்ற அடிப்படையில் வங்கி கணக்கு தொடங்க அனுமதிக்கப்பட்டது. மேலும், இத்திட்டத்தின் மூலம் வங்கி கணக்கு தொடங்கியவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம், கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வங்கி சேவைகளைப் பெற்று வருவதாக கூறினர்.

வரவு- – செலவு பரிவர்த்தனை

இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட கோடிக்கணக்கான வங்கிக் கணக்குகளில், இதுவரை எந்தவித வரவு-செலவு பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இது வங்கிகளுக்கு பெரும் சுமையாக உள்ளது. வங்கிகள் இந்தக்கணக்குகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி வருகிறது

இது தொடர்பாக. பிரதமரின் மக்கள் வங்கிக் கணக்கு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளில், எந்தப் பரிவர்த்தனையும் மேற்கொள்ளப்படாத கணக்குகளை முடிக்க வங்கிகளுக்கு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என ஒன்றிய நிதி சேவைகள் துறை தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இந்த வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கையை நிதி சேவைகள் துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட கணக்குகளில் பரிவர்த்தனைகள் இல்லாதவர்களின் கணக்குகளை செயல்படுத்த, கணக்கு வைத்திருப்பவர்களைத் தொடர்பு கொள்ள வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிதி மோசடி

2014 ஆம் ஆண்டு பிரதமர் துவங்கிய ஜன் தன் வங்கிக்கணக்கில் வலுக்கட்டாயமாக அனைவரையும் வங்கியில் கணக்கு தொடங்க வற்புறுத்தப்பட்டனர். இதன் மூல நிதி மோசடிகள் நடக்க வாய்ப்புள்ளது என்று வங்கிகள் எச்சரித்த போது ஒன்றிய அரசு மோடியின் யோசனை இதை எப்படியும் நடத்தி முடிக்கவேண்டும் என்று கூறி கோடிக்கணக்கான கணக்குகள் துவங்கப்பட்டன. இந்த நிலையில் இந்தக்கணக்குகள் மூலம் நிதி மோசடி பெருமளவில் நடந்துவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கணக்குகளை என்ன செய்வது என்று தெரியாமல் வங்கிகள் திண்டாடி வருகிறது.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *