காரைக்குடி, ஜூலை 12– மாநகர கழக செயலாளர் அ.பிரவீன் முத்துவேல் – இரா.கிருத்திகா இணையேற்பு வரவேற்பு விழாவில் மாவட்டத் தலைவர் வைகறை, மாவட்ட காப்பாளர் சாமி திராவிட மணி, மாவட்ட செயலாளர் சி. செல்வமணி, மாவட்ட துணைத் தலைவர் மணிவண்ணன், மாவட்டத் துணைச் செயலாளர் பழனிவேலு, பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் முனைவர் மு.சு கண்மணி, காரைக்குடி மாநகரத் தலைவர் ஜெகதீசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் செல்வராசன், கழக சொற்பொழிவாளர் தி. என்னாரெசு பிராட்லா, பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைச் செயலாளர் முத்துலட்சுமி, சுப்பையா, வீ. பாலு, தேவ கோட்டை நகரத் தலைவர் வீ.முருகப்பன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர்கள், கவிக்கோ அரவரசன், முனைவர் கோபால்சாமி, பேராசிரியர் இலங்கேஸ்வரன், காளையார் கோயில் ஒன்றிய தலைவர் அழகர்சாமி, பழ. அமுதவள்ளி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நகரத் தலைவர் ஸ்டீபன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். மணமக்களுக்கு ‘தாய் வீட்டில் கலைஞர்’ நூல் வழங்கப்பட்டது.