சென்னை, ஜூலை 12– தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் இன்று (12.7.2025) நடைபெறும் குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய மய்யங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று (11.7.2025) நடைபெற்றது.
இந்த நிலையில் தனியார் சொகுசு பேருந்தில் வினாத்தாள் சில இடங்களில் அனுப்பி வைக்கப்பட்ட தோடு, பேருந்தில் நுழைவுக் கதவை ஏ4 பேப்பரை கொண்டு சீல் வைத்தது பேசுபொருளானது. வழக்கமாக கொண்டு செல்வது போல, கண்டெய்னர்களில் எடுத்துச் செல்லாமல், இதுபோல் பேருந்துகளில் எடுத்துச் செல்வதால் வினாத்தாள் கசிந்துவிட வாய்ப்பு இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
இது குறித்து டிஎன்பிசி தலைவர் எஸ்.கே.பிரபாகர் கூறுகையில், குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள்காள் அனைத்தும் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தற்போது வரை வினாத்தாள்கள் எது வும் கசியவில்லை. மேலும் மதுரையில் வினாத்தாளை கண்டெய்னர் மூலமாக எடுத்துச் செல்லாமல் இதுபோன்ற தனியார் பேருந்துகள் மூலம் எடுத்துச் சென்றது குறித்து விளக்கம் கேட்டு இருக்கிறோம்.
இருப்பினும் மதுரையில் பேருந்தில் காவல்துறை பாதுகாப்புடன் தான் வினாத்தாளை கொண்டு சென்று உள்ளனர். வினாத்தாள் கசிய வாய்ப்பு இல்லை” என்றார்.