உத்தரப்பிரதேசத்தில்
ஆன்மிக கன்வர் காவடி யாத்திரையாம்.
ஆன்மிக கன்வர் காவடி யாத்திரையாம்.
சத்தம் பிடிக்காதாம்… வாகனத்தை, அடித்து நொறுக்கும் சங்கி மங்கிகள்
காவிகளின் அமைதியான ஆன்மிக விளையாட்டாம்!
உத்தரப் பிரதேசம், அரியானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஜூலை, ஆகஸ்ட் இரண்டு மாதங்களும் கன்வர் யாத்திரா என்னும் காவடியாத்திரை சமீப காலமாக பெரும் வன்முறை ஊர்வலமாக மாறி வருகிறது. கடந்த ஆண்டு அரியானா மாநிலத்தில் உணவு விடுதி ஒன்றிலிருந்து மட்டன் வாசனை வருகிறது என்று கூறி காவடி யாத்திரை செல்லும் ஆன்மிக நபர்கள் உணவு விடுதியை அடித்து நொறுக்கியது அனைவரும் படித்த ஒன்றுதான். இந்த ஆண்டும் தொடர்கதையாகி உள்ளது.
இதோ சாலையில் செல்லும் போது ஹார்ன் அடித்தார்கள் என்ற குற்றத்திற்கான ஒரு காவல்துறை ஜீப். ஆட்டோ ரிக்ஷா, மற்றும் உணவு எடுத்துச்செல்லும் தனியார் நிறுவன ஊழியரின் பைக்குகளை அடித்து நொறுக்குகின்றனர்.
காவல்துறை ஜீப்பிற்கு இழப்பு ஏற்பட்டால் அவர்கள் புதிய ஜீப் வாங்கிகொள்வார்கள். ஆனால் கடன் வாங்கி வாழ்வாதாரத்திற்காக ஆட்டோ ஓட்டும் ஓட்டுநரும், இருசக்கர வாகனத்தை வைத்து குடும்பத்தைக் காப்பாற்றும் நபரும் இன்று வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர். இதுதான் இவர்கள் சொல்லும் ஆன்மிக அரசியல்!