கோலாலம்பூர், ஜூலை11– மலேசியாவின் முன்னாள் பிரதமரான டாக்டர் மகாதீர் முகமது தனது 100ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
கோலாலம்பூருக்கு வெளியே உள்ள தனது இல்லத்தில் மிகவும் எளிய முறையில் கொண்டா டினார். 100 வயதான மகாதீர் முகமது இன்றும் காலை உடற் பயிற்சி மற்றும் அரசியல் செயல் பாடுகளில் முன்பைப் போலவே ஈடுபடுகிறார் அவர், தனது நீண்ட ஆரோக்கியத்திற்கான கார ணமாக தனது ஒழுக்கமான சிந்தனையும் தேவையான அளவு எடுத்துகொள்ளும் உணவும் மட்டுமே என்று கூறினார்.
டாக்டர் மகாதீரின் காலை உணவு மிகவும் எளிமையானது. ரொட்டி அல்லது கெத்துப்பாட் எனப்படும் இட்லியைப் போன்ற உணவு உடன் ஒரு வெதுவெதுப்பான இனிப்பில்லாத பசுந்தேனீர் தான்
தான் எப்போதும் உணவை தேவைக்கு மட்டுமே எடுத்துக் கொள்கிறேன் இன்றும் சைக்கிளில் அருகில் உள்ள அலுவலகத்திற்கும் கட்சிப்பணிக்கும் செல்கிறேன். மேலும் எளிமையான உடற்பயிற்சி யும் செய்கிறேன் என்று தனது ஆரோக்கியத்தின் ரகசியம் பற்றி குறிப்பிடும் மகாதீர் முகமது மலேசியாவின் வரலாற்றில் அதிக காலம் பிரதமராகப் பதவி வகித்து நாட்டின் பொருளாதாரத்தையும் உள்கட்டமைப்பையும் மாற்றுவதில் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.