விக்டோரியா, ஜூலை 10- ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள டார்லிங் டவுன்ஸ் தனியார் உயிரியல் பூங்காவுக்கு பள்ளி விடுமுறைக்காக ஆசிரியர் மற்றும் மாணவர்கள் குழு சென்றது.
அப்போது சிங்கம் இருக்கும் கூண்டின் அருகில் நின்றுகொண்டு இருந்த ஆசிரியை ஜோஆன் கேபன் வேடிக்கையாக சிங்கத்தின் கூண்டிற்குள் கையை நுழைத்துள்ளார். அப்போது சில மணித்துளியில் சிங்கம் ஆசிரியையின் கையை கடித்துவிட்டது, இதனால் மணிக்கட்டு துண்டாகியது. இந்த நிகழ்வு நடந்தபோது கேபன் உயிரியல் பூங்காவில் ஊழியர்கள் அங்கு இல்லை. அதே போல் ஆசிரியை பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்ட எல்லையையும் தாண்டி பராமரிப்பு ஊழியர்கள் செல்லும் பகுதிக்குச் சென்றுள்ளார்.
ஆசிரியையின் தவறால் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக உயிரியல் பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது.