செய்திச் சுருக்கம்

Viduthalai
1 Min Read

‘ஆந்திராவில் காவி வேட்டி, தமிழ்நாட்டில் பச்சை வேட்டி’

பவன் கல்யாணுக்கு பைத்தியம் பிடித்திருப்பதாக ஆந்திரா மேனாள் அமைச்சர் ரோஜா விமர்சித்துள்ளார். அண்மையில் மதுரையில் நடைபெற்ற முருகன் பக்தர்கள் மாநாட்டில் பவன்கல்யாண் பங்கேற்றிருந்தார். இது தொடர்பாக பேசிய ரோஜா, ஆந்திரா வந்தால் காவி வேட்டி, தமிழ்நாட்டுக்கு சென்றால் பச்சை வேட்டி அவர் உடுத்திக் கொள்வதாகவும், திடீர் திடீரென இந்த பக்தர், அந்த பக்தர் என்றெல்லாம் அவர் பேசுவதாகவும் தெரிவித்தார்.

காது குடைய பட்ஸ் பயன்படுத்தினால்…

காதில் இயற்கையாகவே உற்பத்தியாகும் மெழுகு போன்ற திரவம், நாளடைவில் கெட்டியாகி அதுவே வெளியே விழுந்துவிடும். ஆனால், பட்ஸ், குச்சி (அ) வேறு எதைக் கொண்டும் காதை குடையும்போது கொஞ்சம் தவறினாலும் செவிப்பறை சேதமடைய வாய்ப்புள்ளது. மேலும், காதுகேளாமை, குமட்டல் & வாந்தியுடன் கூடிய நாள்பட்ட தலைச்சுற்றல், சுவை குன்றுதல், ஏன் சில நேரம் முகத்தில் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தும் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதை சாப்பிட்டால்
இதய அடைப்பு வரும்… எச்சரிக்கை!

பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை, மீண்டும் பயன்படுத்துவது ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த உணவுகளை சாப்பிட்டால் இதயநோய், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. ஆனால், உணவு விடுதிகளில் 60% அளவுக்கு, எண்ணெய் மீண்டும் பயன்படுத்தப்படுகிறதாம். டில்லி, மும்பை, கொல்கத்தாவை ஒப்பிட சென்னை பரவாயில்லையாம். எனினும், வடை, பஜ்ஜி, போண்டா, சில்லி சிக்கன் சாப்பிடுமுன் யோசிக்கவும்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *