தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்டத்திற்கு புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு!

viduthalai
4 Min Read

மாதந்தோறும் சிறப்புக் கூட்டம் நடத்திட முடிவு!

தஞ்சை, ஜூலை 9 தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்ட அமைப்புக்கூட்டம்  நேற்று (8.7.2025) அன்று மாலை-6 மணிக்கு தஞ்சாவூர், மாதாக்கோட்டை சாலை, பூபதி நினைவு பெரியார் படிப்பகம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு அரங்கத்தில் தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்டத்தலைவர் காங்கிரஸ் கட்சி  தஞ்சை மாநகர் மாவட்ட தலைவர் பி.ஜி.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது

தொடக்கத்தில் பாவலர் பொன்னரசு  தந்தை பெரியார் மற்றும் விடுதலை பற்றியும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பாடல்களைப் பாடினார்.  ஏவிஎம் குணசேகரன் அனைவரையும் வரவேற்பு உரையாற்றினார்

கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் விடுதலை வாசர் வட்டம் செயல்பாடுகள் மற்றும் அதன் நோக்கம் குறித்து தொடக்க உரையாற்றினார் .

தொடர்ந்து ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் துரை ,ஓய்வு பெற்றவருவாய் துறை அலுவலர் விசுவநாதன், படிப்பக வாசகர் குழந்தைசாமி, பேராசிரியர்கள்  துரைராசு, ஜெயராஜ், படிப்பக வாசகர் முருகானந்தம், காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட பொது செயலாளர் செந்தில், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சந்துரு, பெரியார் சமூக காப்புஅணி இயக்குநர் தே.பொய்யாமொழி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக இணைச் செயலாளர் லட்சுமணன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் பெரியார் கண்ணன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பாவலர் பொன்னரசு, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஆசிரியர் அழகிரி, பகுத்தறிவு கலை இலக்கிய அணி தஞ்சை மாநகர அமைப்பாளர் கவிஞர் பகுத்தறிவுதாசன், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் ஏழுமலை, காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் லட்சுமி நாராயணன்,  பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைச் செயலாளர் பேராசிரியர் ந.எழிலரசன், படிப்பக செயலாளர் மாநில இளைஞரணி துணை செயலாளர் வெற்றிகுமார், தஞ்சை மாநகர  கழக தலைவர் செ. தமிழ்ச்செல்வன், மாநகர  கழகச் செயலாளர் இரா.வீரகுமார், பகுத்தறிவாளர்கழக மாநில அமைப்பாளர் கோபு.பழனிவேல், மாவட்ட கழக செயலாளர் அ.அருணகிரி, மருத்துவர் செந்தாமரைச்செல்வி,மருத்துவர் அருமைக்கண்ணு, மாவட்ட காப்பாளர் மு.அய்யனார், கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி.அன்பழகன், காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பி னர் ஜேம்ஸ், குயின்ஸ் கல்லூரியின் செயலாளர் தமிழ்நாடு அரசின் சமூக நீதி கண்காணிப்பு குழு உறுப்பினர் பேராசிரியர் உரு. ராஜேந்திரன் ஆகியோரின்  உரையைத் தொடர்ந்து, நிறைவாக  காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் தஞ்சாவூர் மாநகர விடுதலை வாசர் வட்ட தலைவர் பி.ஜி.இராஜேந்திரன் தலைமையுரை ஆற்றினார்

புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்து!

விசிறி அடிகளார், மாணவர் அபிஷேக் உள்ளிட்ட படிப்பக வாசகர்கள் காங்கிரஸ் கட்சி தோழர்கள் மற்றும் விடுதலை வாசகர்கள் ஏராளமானவர்கள்  வருகை தந்தனர்.

தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்ட புதிய பொறுப்பாளர்களுக்கு தஞ்சை மாநகர  கழகத்தின் சார்பில் மாநகர தலைவர்  செ. தமிழ்ச்செல்வனும்,  மாநகர செயலாளர் இரா.வீரகுமார்  பயனாடை அணிவித்துப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.

தீர்மானங்கள்

தஞ்சை மாநகரத்தில் உள்ள விடு தலை வாசகர்களை முற்போக்கு சிந்தனை யாளர்களை இணைத்து விடுதலை வாசகர் வட்டத்தை விரிவாக்குவது என தீர்மானிக்கப்பட்டது

தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவராக கொள்கையாளர் பி.ஜி.இராஜேந்திரனை  அறிவித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது

தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்டமும் பூபதி நினைவு பெரியார் படிப்பது நிர்வாகக் குழுவும் இணைந்து முக்கிய சொற்பொழிவாளர்களைக் கொண்டு மாதம் ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது

ஜூலை 20 ஆம் தேதி விடுதலை வாசகர் வட்டம் மற்றும் பூபதி நினைவு பெரியார் படிப்பகம் நிர்வாகக் குழு சார்பில் தஞ்சையில் சிறப்பு கூட்டம் நடத்துவது எனவும் திரா விடர் கழக துணை பொதுச்செயலாளர் உயர்நீதிமன்ற வழக்குரைஞர்
சே.மெ. மதிவதனியை  சிறப்பு அழைப்பாளராக அழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது

விடுதலை வாசகர் வட்ட உறுப்பினர்கள் அனைவரும் விடுதலை நாளிதழை வாங்கி படிப்பது எனவும் தஞ்சை மாநகரத்தில் விடுதலை சந்தாக்களை பெருமளவில் சேர்ப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது

தஞ்சை மாநகர விடுதலை வாசர் வட்ட
புதிய பொறுப்பாளர்கள்

புரவலர்கள்

பேராசிரியர் உரு.இராஜேந்திரன்

குயின்ஸ் கல்லூரி செயலாளர்

தமிழ்நாடு அரசின் சமூக நீதி கண்காணிப்பு குழு உறுப்பினர்

டாக்டர் த. அருமைக் கண்ணு

மயக்கவியல் மருத்துவர்

பொறியாளர் கோ.ரவிச்சந்திரன்

முதுநிலை ஒப்பந்தக்காரர்

தலைவர்

பி.ஜி.ராஜேந்திரன்

தஞ்சை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்

செயலாளர்

ஏவிஎம்.குணசேகரன்

மருத்துவ துறை ஓய்வு

துணைத் தலைவர்

வெ.துரை

கிராம நிர்வாக அலுவலர் ஓய்வு

துணைச் செயலாளர்

ச.விஸ்வநாதன்

வருவாய் துறை அலுவலர் ஓய்வு

அமைப்பாளர்

மு.செந்தில்

ரயில்வே துறை

செயற்குழு உறுப்பினர்கள்

1.மருத்துவர் செந்தாமரைச்செல்வி

2.ஏ.ஜேம்ஸ்

காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்

3.பேராசிரியர்ஜெயராஜ்

4.அ.குழந்தைசாமி

5.குசலவன்

தலைமை ஆசிரியர் ஓய்வு

6.கவிஞர்பகுத்தறிவுதாசன்

7.கு.முருகானந்தம்

படிப்பக வாசகர்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *