சென்னையில் திருநங்கைகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நாளை மறுநாள் நடக்கிறது

Viduthalai
1 Min Read

சென்னை, ஜூலை 9- வேலைவாய்ப்பற்ற திருநங்கை, திருநம்பியருக்கான சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் சென்னையில் வரும் ஜூலை 11ஆம் தேதி நடை பெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற் றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யம் மற்றும் மாவட்ட சமூக நலத் துறை சார்பில் வேலை யற்ற திருநங்கை. திருநம் பியருக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வகும் ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலை 10 முதல் மதியம் 2 மணிவரை நடை பெறும் முகாமில் 50-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

8ஆம் வகுப்பு முதல்

12ஆம் வகுப்புகள், அய்டிஅய், டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த திருநங்கை, திருநம்பியர்கள் www.tnprivatejobs.tn.gov. in என்ற இணையதளத்தில் பதிவுசெய்து கலந்து கொள்ளலாம்.

அதேபோல் https://forms.gle/ZZHqE7HF4e6AjCX9 இணையவழி படிவத்திலும் தங்களது விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முகாமில் கலந்துகொள்ளும் வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை தேடும் திருநங்கை, திருநம்பிகளும் அதற்காக கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. வேலைவாய்ப்பற்ற திருநங்கை மற்றும் திருநம்பிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *