நைரோபி, ஜூலை. 9- கென்யாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித் தது. இதில் II பேர் உயிரிழந்தனர். 550 பேர் கைது செய்யப்பட்டனர்.
சபா சபா நாள்
கென்யாவில் கடந்த நூற் றாண்டு வரை ஆதிக்க ஆட்சி மற்றும் ஒருகட்சிமுறை ஆட் சியே நடைமுறையில் இருந்தது. இதனால் மக்களாட்சி வேண்டியும், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அப்போதைய மக்கள் தலைவர்கள் பலர் ஒன்று இணைந்து கடந்த 1990ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தில் குதித்தனர். இதில் சர்வாதிகாரி மோய்யை எதிர்த்து போராடிய தலைவர்கள் கதாங்கு, காமின்வா, இமான்யாரா உள்பட 50 பேர் அடித்து கொல்லப்பட்டனர்.
சித்ரவதை
தொடர்ந்து கைது நடவடிக் கையில் சிறையில் வைத்து பலரை சித்ரவதை செய்து கொன்றனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து அங்கு சர்வாதிகார ஆட்சி கலைக்கப் பட்டு மக்களாட்சி நிறுவப்பட்டது. இந்த போராட்ட நாளை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 7ஆம் தேதி சபா சபா நாள் அனுசரிக்கப்படுகிறது. சபா என்றால் உள்ளூர் மொழியான சிவாஹிலியில் எண் ஏழு என்று அர்த்தம். அன்றைய நாளில் கென்யா தலைநகர் நைரோபியில் பொதுமக்கள் கூட்டமாக கூடி மரியாதை செலுத்துவார்கள்.
போராட்டம்
இந்தநிலையில் 7.7.2025 அன்று கென்யாவில் 35ஆவது சபா சபா நாள் அனுசரிக்கப் பட்டது. அப்போது பெண்கள், வாலிபர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் கூடி வந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். – நாட்டில் நிலவி வரும் விலை வாசி உயர்வு, எல்லைப்பகுதிகளில் நிலவும் அச்சுறுத்தல் உள்ளிட்டகார ணங்களை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தை ஒடுக்க அங்கு காவல் துறை குவிக்கப்பட்டனர். அவர்கள் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியெறிந்தும் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுக்க முயன்றனர். இதனால் காவல் துறை-ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே மோதல் வெடித்தது.
11 பேர் சாவு
இந்த வன்முறையில் பெண்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 50 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை மருத்துவர்கள் தீவிரமாக கண் காணித்து வருகிறார்கள்.
வன்முறை காரணமாக அரசுப் பேருந்துகள் மற்றும் கட்டடங் களை சேதப்படுத்திய 550 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.