சென்னை, ஜூலை8- “பெண்ணின் பெருமை பேசும் திராவிட மாடல் ஆட்சி” என்னும் தலைப்பில் உரைப்பொழிவு பெரியார்-அண்ணா-கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 480ஆவது வார நிகழ்வாக 5.7.2025 அன்று இரவு 7 மணிக்கு ஆவடி மாவட்ட கழக மகளிர் அணி தலைவர் சி.ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட கழக செயலாளர் க.இளவரசன் முன்னிலையில் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற் புரையுடன் கவிஞர் மா.வள்ளிமைந்தன்,தே.குணாபாரதி,சு.சிவகுமார் ஆகியோர் உரையாற்றினர்.
மறைந்த பெருங் கவிக்கோ வா.மு.சேது ராமன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வீரவணக்கம் செலுத்தப் பட்டது.
பிச்சைமணி, ஆறுமுகம், கருப்பசாமி,சுமதிமணி, அரிதாஸ், புஷ்பா, வழக் குரைஞர் துரைவர்மன், இராஜமாணிக்கம், சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக வழக்கு ரைஞர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.