அய்தராபாத், ஜூலை 9- தெலங்கானா தலைநகர் அய்தராபாத் அருகில், சங்காரெட்டி மாவட்டம் பாஷமைலாரம் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக சிகாச்சி ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு கடந்த ஜூன் 30ஆம் தேதி ரியாக்டர் டேங்க் திடீரென வெடித்ததில் 40 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 33 பேர் படுகாயம் அடைந்தனர்.