அமெரிக்காவின் வர்த்தக வரி மிரட்டல் ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு கண்டனம்!

viduthalai
2 Min Read

ரியோ டி ஜெனிரோ, ஜூலை8- உலக நாடுகளின் மீது அமெரிக்கா விதித்துள்ள வர்த்தக  வரிகளுக்கு ‘பிரிக்ஸ்’ நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளின் மீது விதிக் கப்படும் அதிகப்படியான வர்த்தக வரிகள் ‘உலக வர்த்தக அமைப்பின் (WTO) விதிகளுக்கு முரணானவை’ என பெயரைக் குறிப்பிடாமல் அமெரிக்காவின் நட வடிக்கைகளை சாடியுள்ள இந்த பிரகடனம், அதிகப்படியான வரி விதிப்பு உலக வர்த்தகத்தைக் குறைத்து, உலகளாவிய விநி யோக சங்கிலிகளை சீர்குலைத்து, நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்து கின்றன என்று குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு கண்டனம்

‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் இரண்டு நாள் உச்சி மாநாடு, பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜூலை 6 அன்று துவங்கியது. இதன் நிறைவாக, 31 பக்க பிரகடனம் வெளியிடப்பட்டது. காசாவில் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல் செய்து வரும் அத்துமீறல்கள், ஈரான் மீது அது நடத்திய தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு பிரிக்ஸ் உச்சி மாநாட்டு கூட்டுப் பிரகடனத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. உக்ரைன்-ரஷ்யா போரில் உக்ரைனுக்கும் கடுமையான கண்டனம் தெரிவிக்கப் பட்டது.

அத்துடன், அமெரிக்காவின் மிரட்டலுக்கும் பதிலடி கொடுக்கப் பட்டுள்ளது. பன்னாட்டு வர்த்தகம் அமெரிக்கவின் டாலரை மய்யமாகக் கொண்டே நடக்கிறது. அமெரிக்கா பிற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும் முக்கிய பொருளாதாரக் காரணியாக டாலரே உள்ளது. இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு மாற்றாக, பொதுவான நாணயத்தை உருவாக்க பிரிக்ஸ் கூட்டமைப்பு முயன்று வருகிறது.

டிரம்ப் மிரட்டல்

கடந்த ஆண்டு ரஷ்யாவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடந்த போது அமெரிக்க டாலருக்கு மாற்றாக புதிய பிரிக்ஸ் நாணயத்தை அறிமுகம் செய்வது பற்றி பேசப்பட்டது. முன்னதாக பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை அந்தந்த நாடுகளின் நாணயத்திலேயே மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.  இது அமெரிக்க டாலரின் செல்வாக்கை குறைக்கும் என்பதால், பிரிக்ஸ் கூட்டமைப்பிற்கு எதிராக டிரம்ப் கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகிறார். டாலர் ஆதிக்கத்தைக் குறைக்கும் எந்த வொரு நடவடிக்கையை பிரிக்ஸ் கூட்டமைப்பு எடுத்தாலும் அந்நாடுகளின் மீது 100 சதவீதம் வரிகள் போடப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.

பிரேசிலில் பிரிக்ஸ் உச்சி  மாநாடு நடைபெற்றுக் கொண்டி ருக்கும் போதே, பிரிக்ஸ் நாடு களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்க மிரட்டல் விடுத்தார். பிரிக்ஸ் கூட்டமைப்பின் முடி வுகள் அமெரிக்க எதிர்ப்பு கொள் கைகள் எனவும், எனவே, பிரிக்ஸ் கூட்டமைப்பு முடிவுகளை ஏற்றுக் கொள்கின்ற மற்றும் அதனுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் ஒவ்வொரு நாட்டிற்கும் கூடுதலாக 10 சதவிகிதம் வரி விதிப்பேன் என்று டிரம்ப் கூறினார்.

முழு உறுப்பினரான இந்தோனே சியா எனினும், கூட்டமைப்பு வெளியிட்டுள்ள 31 பக்க பிரகடனத்தில் அமெரிக்காவின் பெயரைக்  குறிப்பிடாமல் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த  உச்சி மாநாட்டில், பிரிக்ஸ் கூட்டமைப்பின் முழு உறுப்பினராக இந்தோனேசியா இணைக்கப்பட்டுள்ளது. கொலம் பியா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் புதிய மேம்பாட்டு வங்கியின் (NDB) அதிகாரப்பூர்வ உறுப்பினர்களாக இணைந்துள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *