லண்டன், ஜூலை 8- இங் கிலாந்து தலைநகர் லண்டன் மாநகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டு மனித உரிமைகள் செயலகம் இது ஒரு உலகளாவிய இயக்கம் 100 மேற்பட்ட நாடுகளில் அமைதி மற்றும் மனித உரிமைகள் சுற்றுச் சூழலுக்காக விழிப்புடன் செயல் பட்டு அய்.நா. மன்றத்திற்கு அறிக் கைகள் சமர்ப்பித்து வருகிறது இந்த அமைப்பில் பல்வேறு நாடுகளின் அதிகாரம் மிக்க தலைவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
விருது
சுற்றுச்சூழல் மற்றும் பாலைவன மாவதலை தடுக்கும் நாள் கருத்த ரங்கம் நடைபெற்றது இதில் பங்கேற்று உரையாற்றிய விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கலைமாமணி பெருந்தமிழன் டாக்டர் வி.ஜி.சந்தோசத்திற்கும், மல்லை தமிழ் சங்கத்தின் தலைவர் மல்லை சத்யாவுக்கும் பன்னாட்டு மனித உரிமைகள் இயக்கத்தின் உயரிய விருதான அமைதிக்கான தூதுவர் விருதினை பன்னாட்டு மனித உரிமைகளின் இங்கிலாந்து நாட்டின் தலைமைச் செயலாளர் ராபின் மாரிஸ் அவர்களும், பிபிசி ராயல் தலைமை அதிகாரி இயன் பெல்நர் டர்னர் (Ian Pelnar Turner) மற்றும் இதன் தலைவர் சிறந்த சமூக செயல்பாட்டாளர் அப்துல் பாஷித் சையத் அவர்களும் இணைந்து வழங்கினர்.
இவ்விழாவில் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியில் தலைப்பில் டாக்டர் amb. கேனான் ஓட்டோ (amb. Canon Otta) சிறப்புரையாற்றினார்.