ஓமியோபதி மருத்துவர்கள் அலோபதி சிகிச்சை அளிக்கலாமா? மகாராட்டிர பிஜேபி கூட்டணி அரசின் அறிவிப்புக்கு அய்.எம்.ஏ. கடும் எதிர்ப்பு

2 Min Read

மும்பை, ஜூலை 08 ஓமியோபதி மருத்துவர்கள், அலோபதி சிகிச்சை அளிக்க லாம். அலோபதி மருந்துகளை பரிந்துரை செய்யலாம் என்று மகாராட்டிர அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாணையும் வெளி  யிடப்பட்டு உள்ளது.

அலோபதி சிகிச்சை அளிக்கலாம்!

கடந்த 2014-ம் ஆண்டில் மகாராட்டிர மருத்துவ கவுன்சில் சட்டத்தில் திருத்தங்கள் மேற் கொள்ளப்பட்டன. இதன்படி மருந்தியல் சான்றிதழ் படிப்பை நிறைவு செய்த ஆயுர்வேத, சித்த, ஓமியோபதி மருத்துவர்கள், அலோபதி சிகிச்சை அளிக்க லாம், அலோபதி மருந்துகளை பரிந்துரைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

வழக்கு

இதை எதிர்த்து இந்திய மருத்துவர்கள் சங்கம் (அய்எம்ஏ) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2015-ஆம் ஆண்டில் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து மகாராட்டிர சுகா தார அறிவியல் பல்கலைக் கழகம் சார்பில் கடந்த
2016-ஆம் ஆண்டில் சிசிஎம்பி என்ற மருந்தியல் படிப்பு தொடங்கப்பட்டது.

இந்த சூழலில் மகாராட்டிர மருத்துவ கவுன்சில் கடந்த ஜூன் 30-ஆம் தேதி ஓர் அர சாணையை வெளியிட்டது. அதில், “நவீன மருந்தியல் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்ற ஓமியோபதி மருத்துவர்கள் மகாராட்டிர மருத்துவ கவுன்சிலில் முறைப்படி பதிவு செய்யலாம். அதன்பிறகு அவர்கள் அலோபதி சிகிச்சை அளிக்கலாம். அலோபதி மருந்துகளை பரிந்துரை செய்யலாம்’’ என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மகாராட்டிர அரசின் முடிவை ஓமியோபதி மருத்து வர்கள் வரவேற்று உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும் போது, “பல்வேறு எம்பிபிஎஸ் மருத்துவர்கள், தங்கள் நோயாளிகளுக்கு சித்த, ஆயுர்வேத, ஓமியோபதி மருந்துகளை பரிந்துரை செய்கின்றனர். நாங்கள் முறையாக மருந்தியல் சான்றிதழ் படிப்பை நிறைவு செய்துள்ளோம். எங்கள் நோயாளிகளுக்கு தேவையான அலோபதி மருந்துகளை பரிந்துரை செய்ய எங்களுக்கு உரிமை இருக்கிறது. மகாராட்டிர அரசின் முடிவை முழுமனதோடு வரவேற்கிறோம்’’ என்று தெரிவித்தனர்.

கடும் எதிர்ப்பு

ஆனால் மகாராட்டிர அரசின் அறிவிப்புக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் (அய்எம்ஏ) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மகாராட்டிர அய்எம்ஏ தலைவர் சந்தோஷ் கூறும்போது, “மகாராட்டிராவின் மூத்த அரசியல் தலைவர்கள், பல்வேறு ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளை நடத்துகின்றனர். அவர்களின் அழுத்தத்தால் மகாராட்டிர அரசு புதிய அரசாணையை வெளியிட்டு இருக்கிறது. இந்த அரசாணையை எதிர்த்து சட்டரீதியாக போராடுவோம்’’ என்று தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *