சென்னை, ஜூலை 08 எந்த ஆட்சி நடந்தாலும் அவர்கள் 100/100 விழுக்காடு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்
சென்னையில் தாத்தா ரெட்டை மலைச் சினிவாசனாரின் பிறந்த நாள் விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
வாக்குறுதி
தேர்தல் பணி என்பது எங்கள் களப் பணிகளில் ஒன்று என்றும் அதுவே எங்கள் முதன்மையான பணி அல்ல., தேர்தல் நெருங்கும் சூழலில் அதனை நாங்கள் தீவிர்படுத்துவோம் என கூறினார். தற்போது கட்சியின் மறு சீரமைப்புக்கான பணிகளை கவனம் செலுத்தி வருகிறோம் என தெரிவித்தார். திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கிறது., அதுமட்டுமல்லாது திமுக கூட்டணி உறுதியாகவும் கட்டுக்கோப்பாகவும் இருக்கிறது என கூறினார்.
முக்கிய கோரிக்கைகள்
பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அது அனைவருக்கும் தெரிந்த உண்மை என்றும் முக்கியமான சில கோரிக்கைகள் நிறை வேற்றப்பட வேண்டும் என்பது தவிர்க்க முடியாத, மறுக்க முடியாத ஒன்றுதான் எனக் கூறினார். பழைய ஓய்வூதிய திட்ட கோரிக்கைகளை விடுதலை சிறுத்தைகளும் முதலமைச்சருக்கு அவ்வப்போது சுட்டிக்காட்டி உள்ள தாகவும், தேர்தலுக்கு முன்னதாக அதனை நிறைவேற்றுவார்கள் என எண்ணுவதாக கூறினார். அதேபோல் எந்த கட்சியாக இருந்தாலும் 100க்கு 100 விழுக்காடு வாக்குகளை நிறைவேற்ற முடியாது என தெரிவித்தார்.