சிம்லா, ஜுலை 08 இமாச்சல பிரதேச மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளம் காரணமாக மக்கள் பெரும் தவிப்பில் இருக்கும் நிலையில், வெள்ள சேதத்தை நேரில் பார்வையிட்ட நடிகையும் பாரதிய ஜனதா எம்.பி.யுமான கங்கனா ரனாவத், மக்களுக்கு நிவாரண உதவி செய்வதற்கு நான் அமைச்சரும் இல்லை, தன்னிடம் நிவாரண நிதியும் இல்லை என்று என்னிடம் எதுவும் கேட்டுவரவேண்டாம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்
பலத்த மழை
தற்போது இந்தியாவின் மேற்கு மற்றும் இமயமலைச்சாரல் பகுதிகளில் கனமழை பெய்துகொண்டு இருக்கிறது.
இந்த கனமழையால் ராஜஸ்தானம், குஜ்ராத், ஹிமாச்சலப் பிரதேசம் உத்த ராகண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஹிமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி பகுதியில் மேகவெடிப்பு காரணமாக நூற்றுக் கணக்கானோர் காணாமல் போய் உள்ளனர்.
கங்கனா ரனாவத் எம்.பி.,
பல கிராமங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு விட்டதன. இது தொடர்பாக மாண்டி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கங்கனா ரனாவத் வெள்ளச் சேதத்தை பார்வையிட வந்ததார். அப்போது பொதுமக்கள் வெள்ளபாதிப்பு அதனால் ஏற்பட்ட சிரமங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டனர். அதற்கு பதில் கூறிய கங்கனா ரனாவத் “என்னிடம் பேரிடர் நிவாரணத்திற்கான நிதி இல்லை, நான் அமைச்சர் பதவியிலும் இல்லை. நான் ஒரு எம்.பி. மட்டுமே. எனக்கு நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு மட்டுமே எனக்கு உரிமை உள்ளது. மழைவெள்ள பாதிப்பிற்கான நிவாரனம் தொடர்பான விவகாரங்களில் எங்களின் பங்கு மிகவும் குறைவு. ஒன்றிய அரசு நிதி எங்களிடம் தருவதில்லை அதை மாநில அரசுக்குத்தான் கொடுக்கிறது., மாநில அரசு அந்த நிதியை பயன்படுத்துவார்கள் என்னிடம் நிதி எதையும் கேட்க வேண்டாம் என்று கூறினார்.
வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் உதவிகளையும் வழங்குவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு கங்கனாவின் இந்தப் பேச்சு பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.